அரசு மேல்நிலைப் பள்ளி, மழையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மேல்நிலைப்பள்ளி மழையூர்
முகவரி
மழையூர்
புதுக்கோட்டை, தமிழ் நாடு, 622301
இந்தியா
தகவல்
வகைஅரசினர் பள்ளி
பள்ளி அவைமேல்நிலை பள்ளி
வகுப்புகள்7
கற்பித்தல் மொழிதமிழ்,ஆங்கிலம்

அரசு மேல்நிலைப்பள்ளி, மழையூர் (Government Higher Secondary School Mazhaiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மழையூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.[1]

நிர்வாகம்[தொகு]

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் மழையூர் அரசுமேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இப்பள்ளியில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்[தொகு]

பள்ளியில் 1180 மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், 35 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் அறிவியல் வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.[2]

தேர்ச்சி விவரம் (விவசாய பாடப்பிரிவு)[தொகு]

மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு, விவசாய பாடப்பிரிவு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரம் 2010 - 2011 கல்வியாண்டு முதல் 2016 - 2017 வரை.

வரிசை எண் கல்வியாண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்ச மதிப்பெண் மாணவர்கள் பெயர் சதவீதம்
01 2010-2011 31 165 சரவணன் 100
02 2011-2012 49 185 பாரதிராசா 100
03 2012-2013 36 188 ராசபாண்டி 100
04 2013-2014 33 195 கார்த்திக் 100
05 2014-2015 36 198 கனகராசு 100
06 2015-2016 58 200 செளமியா 100
07 2016-2017 95 197 கலைவாணி 100

மேற்கோள்கள்[தொகு]

  1. "மழையூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படுமா?". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/govt-girls-high-school-to-be-started-in-marishyur-827459. பார்த்த நாள்: 6 May 2023. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.