அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நீலகிரி
வகை | மருத்துவம் கல்லூரி and மருத்துவமனை |
---|---|
உருவாக்கம் | 2021 |
சார்பு | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தேசிய மருத்துவ ஆணையம் |
துறைத்தலைவர் | மரு. கீதாஞ்சலி MD., DCH |
அமைவிடம் | , , |
இணையதளம் | gmchnilgiris |
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நீலகிரி (The Nilgiris Government Medical College and Hospital) என்பது அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும். இக்கல்லூரி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
இக்கல்லூரியில் மருத்துவ படிப்புகள் 2021-2022ஆம் கல்வியாண்டிலிருந்து தொடங்கியது.
வரலாறு
[தொகு]உதகமண்டலம் நகரில் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான அடிக்கல்லை 10 சூலை 2020 அன்று (வெள்ளிக்கிழமை) தமிழக முன்னாள் முதல்வர் கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, திட்டத்தை முடிக்க 18 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.[1] கல்லூரியின் கட்டுமான செலவை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செலுத்தியது. மருத்துவக் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கட்டுமானம் தொடங்கியதிலிருந்து அக்டோபர் 2022 வரை, வளாகத்தின் நான்கு தொகுதிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.[2] 12 சனவரி 2023 அன்று, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உட்படத் தமிழகம் முழுவதும் 11 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.[3][4][5] இத்தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.[3]
வளாகம்
[தொகு]இக்கல்லூரி வளாகம், உதகமண்டலம் இந்து நகரில் 25 ஏக்கர் நிலமும் இதை ஒட்டிய பகுதிகளில் 15 ஏக்கர் நிலமும் என மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான 750 விடுதி அறைகள் உள்ளன.
கல்வி
[தொகு]நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆண்டுதோறும் 150 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் பிரிவில் கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இணைப்பு
[தொகு]நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Foundation laid for Rs 447 crore medical college in Ooty". பார்க்கப்பட்ட நாள் 28 May 2023.
- ↑ "Delay in construction of Udhagamandalam medical college affects students, residents". www.thehindu.com. Udagamandalam: The Hindu. 5 October 2022. பார்க்கப்பட்ட நாள் 28 May 2023.
- ↑ 3.0 3.1 "PM Modi inaugurates 11 new medical colleges in Tamil Nadu". www.thehindu.com. Chennai: The Hindu. 13 January 2023. பார்க்கப்பட்ட நாள் 28 May 2023.
- ↑ "Ooty Government Medical College and Hospital will become functional in July, says T.N. Health Minister Subramanian". www.thehindu.com. Udagamandalam: The Hindu. 4 April 2023. பார்க்கப்பட்ட நாள் 28 May 2023.
- ↑ "Hon'ble Prime Minister Inaugurated Medical College on 12-01-2021 at Ooty". பார்க்கப்பட்ட நாள் 28 May 2023.