அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை
நிறுவப்பட்டது 2010
பெற்றோர் நிறுவனம்

அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் (Government Villupuram Medical College) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் உள்ள முண்டியம்பாக்கம் கிராமத்தில் 2010-ல் நிறுவப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனம் ஆகும்.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரி ஆண்டுக்கு 100 எம்பிபிஎஸ் பட்ட மாணவர்களை அனுமதிக்கின்றது. இதில் 85 மாநில ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் 15 அகில இந்திய ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இக்கல்லூரியில் ஆண்டுக்கு 140 துணை சுகாதார அறிவியல்/மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மாணவர்களையும் 130 துணை சுகாதார அறிவியல்/பட்டய மாணவர்களுக்கும் கல்வியினை வழங்குகிறது. விழுப்புரம், அரசு மருத்துவக் கல்லூரி, புது தில்லியில் உள்ள இந்திய மருத்துவக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி.[1]

முதுகலை மருத்துவப் பட்டப்படிப்புகள் 2019-20 கல்வியாண்டிலிருந்து 5 சிறப்புத் துறைகளின் கீழ் ஆண்டுக்கு 40 மருத்துவர்களைச் சேர்க்கும் வகையில் செயல்படுகிறது.

மருத்துவப் படிப்புகளைத் தவிர, மருத்துவக் கல்லூரி செவிலியர் மாணவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையமாகவும் செயல்படுகிறது.

மருத்துவமனை[தொகு]

கல்லூரியானது 650 கற்பித்தல் படுக்கைகள் மற்றும் 500 கற்பித்தல் அல்லாத படுக்கைகள் நோயாளிகளின் பராமரிப்பு மருத்துவமனையுடன் இணைந்துள்ளது. இது தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்முயற்சியின் கீழ் ஒரு அவசர சிகிச்சைப் பிரிவு[2] மற்றும் புற்றுநோயியல், அறுவைசிகிச்சை செரிமானம், சிறுநீரகம் மற்றும் குழந்தை அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளை உள்ளடக்கியது. இந்த மருத்துவமனையில் மத்திய ஆய்வகம், கணினி ஊடச்சு வரைவு மையம், நகில்வரைவு பிரிவு மற்றும் வழக்கமான ஊடுகதிர் மற்றும் மீயொலி வரைவி சேவைகள் உள்ளன.

இக்கல்லூரியானது தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், கிண்டி, சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்நிர்வாகம் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

விடுதி வசதிகள்[தொகு]

இக்கல்லூரியில் 500 இளநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு வளாகத்தில் ஆண் மற்றும் பெண் தங்க தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன. இது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான குடியிருப்புகளையும் கொண்டுள்ளது.

மத்திய நூலகம்[தொகு]

1600 சதுர மீட்டர் பரப்பளவில் 100 மாணவர்கள் அமரும் வகையில் மத்திய நூலகம் கட்டப்பட்டது. இது 2015ஆம் ஆண்டு நிலவரப்படி 7000 பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பு புத்தகங்கள் மற்றும் 100 மருத்துவ இதழ்களை வைத்திருந்தது.

இந்த நூலகத்தில் தேசிய மற்றும் சர்வதேச இணையவழியிலான பத்திரிகைகளுக்கான அணுகலுடன் மின் நூலக வசதியும் உள்ளது.

மருத்துவக் கல்வி பிரிவு[தொகு]

மருத்துவக் கல்விப் பிரிவு கல்லூரி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளது. இது 250 இருக்கைகளுடன் செயல்படுகிறது. பட்டதாரி மருத்துவக் கல்விக்கான இந்திய மருத்துவக் கழக ஒழுங்குமுறை 1997 ஆசிரிய உறுப்பினர்கள் நவீன கல்வித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த நோக்கத்தை அடைவதற்கு, ஆசிரிய மேம்பாட்டிற்காக மருத்துவக் கல்வி அலகுகள் / துறைகள் நிறுவப்பட்டு, ஆசிரியர்களுக்கு கற்றல் வளங்களை வழங்கல் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சுகாதார காப்பீட்டு திட்டம்[தொகு]

தமிழக அரசின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இம்மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Villupuram Government Medical College Admission 2023-Cut off, Fees, Ranking, MBBS/PG/SS Courses". MBBSCouncil (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-22.
  2. https://www.dailythanthi.com/News/Districts/2019/06/06003420/Villupuram-Government-Medical-College-HospitalImprovement.vpf

வெளியினைப்புகள்[தொகு]

  • கல்லூரி இணையத்தளம் [1]