அரசு அருங்காட்சியகமும் ஓவியக் கூடமும், சண்டிகார்


அரசு அருங்காட்சியகமும் ஓவியக் கூடமும், சண்டிகார் (Government Museum and Art Gallery) இந்திய ஒன்றியப் பிரதேசமான சண்டிகாரில் உள்ள சண்டிகார் நகரத்தில் ரோசு தோட்டத்துக்கு அருகில் உள்ள 10-சி பகுதியில் உள்ளது.
வரலாறு[தொகு]
1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, உலகப் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான லீ கொபூசியே என்பவரால் வடிவமைக்கப்பட்ட 65மீட்டர் x 65மீட்டர் பரப்பளவுள்ள சதுரவடிவான கட்டிடத்தில் அமைந்துள்ளது[1]
இந்த அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும் பின்வரும் பிரிவுகளையும் கொண்டுள்ளது:[2]
- தேசிய வரலாற்று அருங்காட்சியகம்
- தேசிய உருவப்படக் கூடம்
- சண்டிகார் கட்டிடக்கலை அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகம் காப்பாட்சியர் (curator) ஒருவரின் கீழ் அருங்காட்சியக ஆலோசனைக் குழுவினரின் உதவியுடன் நிர்வகிக்கப்படுகின்றது. இங்குள்ள 10,000 க்கு மேற்பட்ட காட்சிப்பொருட்களில் பெரும்பாலானவை சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற இந்தியக் கலைப்பொருட்கள் ஆகும். இங்கே இரண்டு அருங்காட்சியகக் கடைகளும், ஒரு சிற்றுண்டிச் சாலையும் உள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2006-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060503154641/http://chdmuseum.nic.in/architecture.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2006-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060503154559/http://chdmuseum.nic.in/sections.html.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
- சண்டிகார் அருங்காட்சியக இணையத்தளம் பரணிடப்பட்டது 2008-02-08 at the வந்தவழி இயந்திரம்