அம்ரித்தாரா அருவி
அம்ரித் தாரா (Amrit Dhara) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை அருவி ஆகும். இது மகாநதி ஆற்றின் துணை நதியான ஹஸ்டியோ ஆற்றிலிருந்து உருவாகிறது. [1] சிர்மிரியில் இருந்து 50 கிமீ தொலைவிலும் மற்றும் மனேந்திரகாரில் இருந்து 30 கிமீ தொலைவிலும் இந்த அருவியானது அமைந்துள்ளது. இந்த அருவி மனேந்திரகர்-பைகுந்த்பூர் தேசிய நெடுஞ்சாலையான என்எச் 43-இல் அமைந்துள்ளது. இந்தியாவில் சத்தீசுகரில் உள்ள மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூரில் உள்ள அம்ரித் தாராஅருவி 90.0 அடி (27.4 மீட்டர்கள்) உயரத்தில் இருந்து விழுகிறது.
வரலாறு
[தொகு]இந்த அம்ரித் தாரா அருவி, மனேந்திரகர், புனிதமான சிவன் கோவிலுக்காகவும் மிகவும் புகழ்பெற்றது. இந்த இடத்தைச் சுற்றி ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமான மேளா நடத்தப்படுகிறது. இந்த மேளா 1936 ஆம் ஆண்டில் கோரியா மாநிலத்தின் அரசராக இருந்த ராமானுஜ் பிரதாப் சிங்கு டியோவால் தொடங்கப்பட்டது. மகா சிவராத்திரி விழாவின் போது நடைபெறும் இந்த விழாவிற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த அருவியானது இதைச் சுற்றியுள்ள பகுதி, மக்களுக்கு குறிப்பாக குடும்பங்களுக்கு ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். இந்த இடத்தின் அழகு ஒவ்வொரு பார்வையாளர்களையும் மயக்குவதோடு அடிக்கடி அந்த இடத்திற்குச் செல்ல அவர்களை ஈர்க்கிறது.