அம்ரிதா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்ரிதா சிங்
Amrita Singh & Sara Ali Khan at Shaadi By Marriott showcase (08) (cropped).jpg
2017 இல் சிங்.
பிறப்பு9 பெப்ரவரி 1958 (1958-02-09) (அகவை 64)
புது தில்லி, இந்தியா
பணிதிரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1983 முதல் தற்போது வரை
பெற்றோர்ஷிவின்ந்தர் சிங் விர்க்(தந்தை)
ருக்சானா சுல்தானா
வாழ்க்கைத்
துணை
சைஃப் அலி கான்
(தி. 1991; ம.மு. 2004)
பிள்ளைகள்2, சாரா அலி கான் (மகள்)
இப்ராஹிம் அலி கான் (மகன்)

அம்ரிதா சிங் (Amrita Singh) (பிறப்பு: பிப்ரவரி 9, 1958).[1] இவர் ஓர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 80 மற்றும் 90 களில் பிரபலமான நடிகையாக இருந்தார். இவர் தற்போதும் திரைப்படத்திலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒரு சில பாத்திரங்களில் தோன்றி வருகிறார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அம்ரிதா சிங்கின் தாயார் ருக்சானா சுல்தானா முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் [2] இவரது சீக்கிய தந்தையான, இராணுவ அதிகாரி ஷிவிந்தர் சிங் ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் இருந்து வந்தவர்.[3] 1970 களில் அவரது தாயார் இந்தியாவின் நெருக்கடி நிலையின் போது சஞ்சய் காந்தியுடன் அரசியல் தொடர்பில் இருந்தார்.[4][5][6][7] [8] பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ,நடிகை பேகம் பரா மற்றும் நடிகர் அயூப் கான் ஆகியோர் இவரது உறவினர்களாவார்கள்.[2] புதுடில்லி மாடர்ன் பள்ளியில் ஆங்கிலம் பயின்ற இவர், பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளிலும் புலமை பெற்றுள்ளார்..[9]

தொழில்[தொகு]

1983 முதல் 1993[தொகு]

1983 ஆம் ஆண்டில் பாலிவுட் படமான 'பேதாப்' திரைப்படத்தில் சன்னிதியோலுடன் இணையாக அறிமுகமான சிங், பின்னர், மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற 'சன்னி' (1984), 'மர்த்' ,'சாஹேப்' (1985), 'சாமலி கி ஷாடி' மற்றும் 'நாம்' (1986), குத்கர்ஸ் (1987) போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சன்னி தியோல் மற்றும் சஞ்சய் தத் உடன் மட்டுமல்லாமல் 1980 களின் இரு முக்கிய நடிகர்களான அனில் கபூர் மற்றும் அமிதாப் பச்சன் போன்ற நடிகர்களுடனும் வெற்றிகரமான கதாநாயகியாக நடித்துள்ளார்.[10] முன்னணி பாத்திரங்களில் நடித்து வந்த இவர் பின்னாளில் 'ராஜு பான் கயா ஜென்டில்மேன்', (1992) மற்றும் 'ஆய்னா' (1993) போன்ற படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இதற்காக அவர் பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகை விருது வென்றார். அமிர்தா சிங் பாலிவுட் சகாப்தத்தின் சின்னமாக விளங்குகிறார். அவரது பளபளப்பான அலங்காரம், அவரது உடை மிகவும் புகழ் பெற்றதாக விளங்கியது. அவரது நடிப்பில் வந்த 'பேத்தாப்' , 'நாம்' , 'சாகப்' ,' சாமலி கி ஷாடி' , 'ஆய்னா' போன்ற படங்களின் உரையாடல்கள் மற்றும் இசைக் காட்சிகள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத நினைவுகளாக உள்ளது. அவர் குடும்ப வாழ்க்கைக்கு திரும்ப எண்ணி ஓய்வு பெற முடிவு செய்தார் பின்னர் 1993 ஆம் ஆண்டு கடைசியாக ரங் என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

2002 முதல் தற்போது வரை[தொகு]

அம்ரிதா 2002 ஆம் ஆண்டில் 'மார்ச் 23, 1931: ஷஹீத்' திரைப்படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இதில் பகத் சிங்காக நடித்த பாபி தியோலின் தாயாராக நடித்தார். 2005 இல் ஸ்டார் பிளஸ் தொலைகாட்சியில் ஏக்தா கபூர் இயக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட காவ்யாஞ்சலி என்ற குடும்ப நாடகத்தில் சிங் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார், அது பெரும் புகழ் பெற்றுத்தந்தது. [11] அந்த ஆண்டின் பிற்பகுதியில், வெளி வந்த 'கலியுக்' (2005) என்ற திரைப்படத்தில் மற்றொரு எதிர்மறை பாத்திரத்தில் நடித்ததற்காக பாராட்டப்பட்டார். 2007 ஆம் ஆண்டில், அபூர்வா லாக்கியா இயக்கத்தில் 'ஷூட்அவுட் அட் லோகன்வாலா' திரைப்படம், மற்றும் 'மாயா டொலஸ்' படத்தில் தாய் ரத்னப்ரபா டொலஸ் பாத்திரத்தில் நடித்தார். விவேக் ஒபரோய் மாயா வேடத்தில் நடித்தார். பின்னர் அவர் நடித்த ஆந்த்ரோலஜி திரைப்படம் "டஸ் கஹனியான், மற்றும் சிறுகதையான புராண்மசி"யிலும் தோன்றினார்.

அவரது நடிப்பு பயணத்தில் 2010 ல் 'காஜரே' படத்தில் தொடர்ந்து நடித்தார், மேலும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த 'அவுரங்கசீப்' படத்தில் தோன்றினார். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஜாக்கி செராபபுடன் இணைந்தார்.[12] 2014 ஆம் ஆண்டில், தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்த 2 ஸ்டேட்ஸ் திரைப்படத்தில், நடிகர் அர்ஜுன் கபூரின் தாயாராக நடித்தார். இத்திரைப்படம் ஏப்ரல் 18, 2014 அன்று வெளியிடப்பட்டது.[13] 2016 ஆம் ஆண்டில், டைகர் ஷெராபின்' யின் தாயாக "பிளையிங் ஜாட்" படத்தில் அவர் தோன்றினார், அண்மையில் 2017 ஆம் ஆண்டில் பாராட்டப்பட்ட "இந்தி மீடியம்" என்ற நாடகத்தில் முன்னணி பாத்திரத்தில் தோன்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அம்ரிதா சிங் நடிகர் சைஃப் அலி கானை 1991 இல் இஸ்லாமிய திருமண முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.[14] அம்ரிதாவை விட பன்னிரண்டு வயது இளையவரான சைஃப் அலி கான் முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனின் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர். ஆகியோரது மகனாவார். சர்ச்சைகள் இருந்தபோதிலும், அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அம்ரிதா தனது திருமணத்திற்குப் பிறகும் நடித்துக்கொண்டிருந்தார். பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த இணை 2004இல் விவாகரத்து பெற்றது.[15]

அவர்களுக்கு சாரா அலி கான் என்ற மகளும் (1995) இப்ராஹிம் அலி கான் (2001) என்ற மகனும் உண்டு. சாரா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இப்ராஹிம் அலி கான் இங்கிலாந்தில் படிக்கிறார். இப்ராஹிம் 'தஷான்' என்றத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சாரா அலி கான் தனது முதல் படமான கேதார்நாத் என்ற படத்தில் டிசம்பர் 7, 2008 அன்று அறிமுகமானார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Film Actress Amrita Singh — Bollywood Star Amrita Singh — Amrita Singh Biography — Amrita Singh Profile". 21 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 Varma, Anuradha (14 June 2009). "In Bollywood, everyone's related!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Rare Pictures & Interesting Facts about 80s B-town Sensation Amrita Singh". Dailybhaskar.com. 10 February 2016. 21 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
 4. Das, Veena. (Editor); Tarlo, Emma (2000). Violence and subjectivity (9th printing. ). Berkeley: University of California Press. பக். 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520216082. https://books.google.com/books?hl=en&lr=&id=7KsEcQnb2VIC&oi=fnd&pg=PA242&dq=ruksana+sultana+sterilization+vasectomy&ots=GqZo1H38oz&sig=rpGbBhQYTlaxIXFBl_8gQT3k6p0#v=onepage&q=sultana&f=false. 
 5. Tarlo, Emma (2001). Unsettling memories : narratives of the emergency in Delhi. Berkeley: University of California Press. பக். 38–39, 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520231221. https://books.google.com/books?hl=en&lr=&id=3IO1WB2H8UUC&oi=fnd&pg=PR5&dq=ruksana+sultana+sterilization+vasectomy&ots=LMdd4Ww_dG&sig=it0hAR3VF0L9lEo_w1aZ-Y6IVnY#v=onepage&q=sultana&f=false. பார்த்த நாள்: 13 February 2017. 
 6. Gwatkin, Davidson R. "Political will and family planning: the implications of India's emergency experience." Population and Development Review (1979): 29-59.
 7. French, Patrick (2011). India : a portrait (1st U.S. ). New York: Alfred A. Knopf. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0307272430. https://books.google.com/books?hl=en&lr=&id=9Umq5giFg8gC&oi=fnd&pg=PR9&dq=%22rukhsana+sultana%22+sanjay+gandhi&ots=q_p25krHQM&sig=SacXRrChKLzylRi3aHIhII_Wq4A#v=onepage&q=%22rukhsana%20sultana%22%20&f=false. பார்த்த நாள்: 13 February 2017. 
 8. "#1975Emergency रुखसाना सुल्ताना : एक मुस्लिम सुंदरी जिसे देखते ही मुस्लिम मर्दों की रूह कांप जाती थी".
 9. rafflesia. "Saif Ali Khan and Amrita Singh". 21 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Bollywood Actress: Amrita Singh's Biography". 6 May 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Amrita Singh". 5 மே 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 April 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 12. "Arjun Kapoor Likely to Team Up with Yash Raj Films Again". PTI. 22 February 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
 13. "2 States: Amrita Singh to play Arjun Kapoor's punjabi mother with an expert polish the role seemed totally typical or original in tone. On the other hand,Revati of south-indian films, as Alia's mother gave a skilled acting performance that was a pleasure for viewers.Also the unmatched relation with Ronit Roy's character was a strong feeling scene for viewers. Amrita was fabulous in 2 States". the times of india. 18 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
 14. "No one changes their religion in order to get married: Saif Ali Khan speaks about 'love jihad'". The Express Tribune. 24 April 2015. 21 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
 15. Iyer, Meena (3 November 2014). "Bollywood has a low divorce rate". The Times of India. 21 April 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரிதா_சிங்&oldid=3295955" இருந்து மீள்விக்கப்பட்டது