அம்ரிக் சிங் அலிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரிக் சிங் அலிவால்
அம்ரிக் சிங் அலிவால்
Amrik Singh Aliwal
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1996-1999
முன்னையவர்இராச்சீந்தர் கவுர் புலரா
பின்னவர்குர்சரண் சிங் காலிப்பு
தொகுதிலூதியானா சட்டமன்றத் தொகுதி, பஞ்சாப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1958 (1958-01-15) (அகவை 66)
உலோகியன் காசு, சலந்தர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா
அரசியல் கட்சிபஞ்சாப் லோக் காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்பல்விந்தர் கவுர்
பிள்ளைகள்இயத்விந்தர் சிங் அலிவால் (மகன்) , பனீந்தர் கவுர் (மகள்)
வாழிடம்(s)அலிவால் கிராமம், லூதியானா மாவட்டம்
மூலம்: [1]

அம்ரிக் சிங் அலிவால் (Amrik Singh Aliwal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில் உள்ள அலிவால் கிராமத்தின் சர்பஞ்சாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு மக்களின் சனநாயக உரிமைகளுக்காகப் போராடியதற்காக ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிரோமணி அகாலி தளத்தின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை லூதியானாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினராக இருந்தார். [1] [2] [3] 14 டிசம்பர் 2021 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பஞ்சாப் லோக் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். [4]

  • 2019: தலைவர், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நிறுவனம் பஞ்சாப் மாநில கூட்டமைப்பு.
  • 2012–2017: தலைவர், பஞ்சாப் மாநில வேளான் தொழிற்சாலைகள் ஆணைய நிறுவனம்.. 
  • 2007–2017: துணைத் தலைவர், சிரோமணி அகாலி தளம் (பஞ்சாப்)
  • 1998–2007: பொதுச் செயலாளர், சிரோமணி அகாலி தளம் (பஞ்சாப்)
  • 1998–1999: உறுப்பினர், போக்குவரத்து மற்றும் சுற்றுலா குழு
  • 1998–1999: உறுப்பினர், அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழு
  • 1998–1999: உறுப்பினர், இரயில்வே குழு
  • 1998: 12 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1996–1997: போக்குவரத்து மற்றும் சுற்றுலா மீதான உறுப்பினர் குழு
  • 1996–1997: உறுப்பினர் ஆலோசனைக் குழு, மேற்பரப்பு போக்குவரத்து அமைச்சகம்
  • 1996: 11ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1993–1998: தலைவர், அகில இந்திய இளைஞர், அகாலி தளம்
  • 1988–1993: மூத்த துணைத் தலைவர், அகில இந்திய இளைஞர் அகாலி தளம்
  • 1985–1988: பொதுச் செயலாளர், அகில இந்திய இளைஞர் அகாலி தளம்   
  • 1985–1988: இயக்குனர், கூட்டுறவு வங்கி, லூதியானா 
  • 1979–1985: மாவட்டத் தலைவர், லூதியானா, அகில இந்திய இளைஞர் அகாலி தளம்
  • 1979–1993: சர்பஞ்ச், அலிவால் கிராமம் (15 ஆண்டுகள்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ludhiana not a bastion of any Political party, Congress wins 9 times, SAD 7 Times in MP Polls". Daily Post. 24 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 April 2019.
  2. "Former SAD Ludhiana MP Amrik Aliwal joins Congress". Hindustan Times. 15 December 2015. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
  3. Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. https://books.google.com/books?id=rFpPAQAAMAAJ. பார்த்த நாள்: 5 April 2019. 
  4. "Punjab: अमरिंदर सिंह की पार्टी पंजाब लोक कांग्रेस में एक पूर्व MP और 4 पूर्व MLAs हुए शामिल". 2021-12-14. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரிக்_சிங்_அலிவால்&oldid=3829136" இலிருந்து மீள்விக்கப்பட்டது