உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பிராசியா

ஆள்கூறுகள்: 39°09′29″N 20°59′13″E / 39.158°N 20.987°E / 39.158; 20.987
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பிராசியா
Ἀμβρακία
அம்ப்ராசியாவில் ஒரு சிறிய அரங்கம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Balkans" does not exist.
மாற்றுப் பெயர்Arta
பகுதிஎபிரஸ்
ஆயத்தொலைகள்39°09′29″N 20°59′13″E / 39.158°N 20.987°E / 39.158; 20.987
வகைநகரம்
வரலாறு
காலம்கிரேக்கம், உரோமன், பைசாந்தியன்

அம்ப்ராசியா (Ambracia, கிரேக்கம் கிரேக்கம்: Ἀμβρακία , எப்போதாவது Ἀμπρακία , அம்ப்ராசியா ) என்பது பண்டைய கிரேக்கத்தைச் சேர்ந்த நகரமாகும். இதன் தொல்லியல் தளம் நவீன ஆர்டாவில் உள்ளது. அம்ப்ராசியா கிமு 625 இல் கொரிந்தியர்களால் கைப்பற்றப்பட்டது. இது அம்பிராசியன் வளைகுடாவிலிருந்து சுமார் 11 கிமீ (7 மைல்) தொலைவில், செல்லக்கூடிய ஆற்றின் அராக்தோஸ் (அல்லது அராத்தஸ்) வளைவில், வளமான மரங்கள் நிறைந்த சமவெளிக்கு மத்தியில் அமைந்திருந்தது. [1]

வரலாறு[தொகு]

அம்ப்ரேசியா கிமு 650 மற்றும் 625 க்கு இடையில் கொரிந்திய சர்வாதிகாரி சிப்செலசின் மகன் கோர்கசால் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில் இதன் பொருளாதாரம் வேளாண் நிலங்கள், மீன்பிடித்தல், கப்பல் கட்டுவதற்கான மரங்கள் மற்றும் எபிரசின் விளைபொருட்களை ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. [1] கோர்கசின் மகன் பெரியாண்டர் நடுகடத்தப்பட்டப் பிறகு இதன் அரசாங்கம் வலுவான சனநாயக அரசாக வளர்ந்தது. அம்ப்ராசியாவின் ஆரம்பகால கொள்கையானது கொரிந்துக்கு விசுவாசம் (அதனால் இது எபிரஸ் பிராந்தியத்தின் வர்த்தக நுழைவாயிலாக செயல்பட்டது) மற்றும் அதன் விளைவாக கோர்சிரா மீதான வெறுப்பால் தீர்மாணிக்கப்பட்டது (கிமு 433 இல் கலகக்கார கொரிந்துவின் குடியேற்றமான கோர்சிரா (நவீன கோர்ஃபு) மற்றும் கொரிந்துக்கு இடையே நடந்த சைபோட்டா சமரில் அம்ப்ராசியா கொரிந்துவின் ஆதரவாளராக கலந்து கொண்டது போல). [2]

ஆம்பிலோச்சியன்கள் மற்றும் அகர்னானியர்களுடன் பல எல்லைப் பூசல்களானது அம்பிராசியாவின் அரசியலின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே இது பெலோபொன்னேசியன் போரில் ஐடோமீனில் (426) தோற்கடிக்கப்படும் வரையில் முக்கிய பங்கை ஆற்றியது. அதனால் இதன் வளங்கள் முடங்கியது. [2]

கிமு 4 ஆம் நூற்றாண்டில் இதன் பாரம்பரிய கொள்கையைத் தொடர்ந்தது. ஆனால் 338 இல் மாசிடோனின் இரண்டாம் பிலிப்பால் முற்றுகையிடப்பட்டது. கொரிந்த்து மற்றும் ஏதென்சின் உதவியுடன், இது பிலிப்பின் கைகளில் இருந்தும் முழுமையான ஆதிக்கத்திலிருந்தும் தப்பியது. இருப்பினும் மாசிடோனிய அரண்காவல் செய்யப் படையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [1] கிமு 294 இல், மாசிடோனிய மேலாதிக்கத்தின் கீழ் நாற்பத்து மூன்று ஆண்டுகள் அரை-சுயாட்சி நாடாக இருந்த பிறகு, அம்ப்ரேசியாவை கசாண்டரின் மகனால் எபிரசின் மன்னரான பைரசுக்கு வழங்கப்பட்டது. அவர் இதை தனது தலைநகராக மாற்றி, அரண்மனை, கோயில்கள், அரங்குகள் போன்றவற்றைக் கட்டி அழகூட்டினார். ஏட்டோலியன் கூட்டணிக்கு எதிரான மாசிடோனின் ஐந்தாம் பிலிப் மற்றும் எபிரோட்ஸ் போர்களில் (220-205) ஆம்ப்ரேசியா ஒரு கூட்டணியில் இருந்து மற்றொன்றுக்கு சென்றது, ஆனால் இறுதியில் பிந்தைய கூட்டமைப்பில் சேர்ந்தது. ரோமுக்கு எதிரான ஏட்டோலியர்களின் போராட்டத்தின் போது, அது கடுமையான முற்றுகையாக இருந்தது. [2] ரோமானியர்களின் முற்றுகையில் சுரங்கங்களில் நச்சு வாயு முதன்முதலில் செலுத்தப்பட்டது. [3]

கிமு 189 இல் அம்ப்ராசியா மார்கஸ் ஃபுல்வியஸ் நோபிலியரால் கைப்பற்றப்பட்டு சூறையாடப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக முக்கியத்துமிழந்தது. [1] [2] பைசண்டைன் காலங்களில் ஆர்டா என்ற பெயரில் ஒரு புதிய குடியேற்றம் இங்கு ஏற்பட்டது. இந்த பிந்தைய நகரத்திற்கு அருகிலுள்ள பெரிய, நன்கு தொகுதிகளின் சில துண்டு துண்டான சுவர்கள் அம்ப்ராசியாவின் ஆரம்பகால செழிப்பைக் காட்டுவனவாக உள்ளன. [2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Hammond, Nicholas Geoffrey Lemprière (1996), "Ambracia", in Hornblower, Simon; Spawforth, Anthony (eds.), Oxford Classical Dictionary (3rd ed.), Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-521693-8
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Caspari 1911.
  3. Polybius 21.28
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிராசியா&oldid=3423309" இலிருந்து மீள்விக்கப்பட்டது