அம்பிகா, பார் ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பிகா
பார் ராஜா
சுமார் 18 ஆம் நூற்றாண்டின் ஒரு கையெழுத்துப் பிரதியில் அம்பிகா, பார் ராஜாவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
பார் ராஜா
பதவியில்1732 – 1738
பிறப்புதிரௌபதி
கலுகாயன் கோன், சிவசாகர்
இறப்பு1738
சிமதாலி, கோலாகாட், அகோம் பேரரசு (தற்போதைய அசாம், இந்தியா)
துணைவர்
ராம்நாத் சோலால் கோகன் (பிரிந்தது 1732)

சிவசிங்கா (தி. 1732)
குழந்தைகளின்
பெயர்கள்
திபம் ராஜா உட்பட 3 பேர்
மதம்இந்து சமயம்
ஊர்வலத்தில் சிவசிங்கா மற்றும் அம்பிகை சுமார் கி.பி. 1735

அம்பிகா, பார் ராஜா (Ambika, Bar Raja) (பிறப்பு திரௌபதி ; இறப்பு 1738) அகோம் மன்னன் சிவ சிங்கா என்பப்படும் சுதன்பாவின் பட்டத்தரசியாவார். இவரது மூத்த சகோதரி புலேசுவரியின் மரணத்திற்குப் பிறகு இவர் பார் ராஜா ஆனார். சிவசாகர் சிவத்தோள் மற்றும் சிவசாகர் குளம் ஆகியவற்றை நிர்மாணிப்பதில் பெயர் பெற்றவர். மேலும், கற்றல் மற்றும் கல்வியின் சிறந்த புரவலராக இருந்தார். [1]

குடும்பம்[தொகு]

அரசவையில் பார் ராஜா அம்பிகை, மடியில் திபம் ராஜா அமர்ந்திருக்கிறார்

அம்பிகை, திரௌபதி என்ற பெயருடன் பிறந்தார். [1]

திரௌபதி மிரி ஹண்டிகோய் குடும்பத்தைச் சேர்ந்த ராம்நாத் சோலால் கோகன் என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். [1] [2]

திரௌபதியின் மூத்த சகோதரியான புலேசுவரி [3] 1731இல் இறந்தார். மன்னன், சிவ சிங்கா, பின்னர் வலுக்கட்டாயமாக திரௌபதியின் கணவனிடமிருந்து பிரித்து மணந்து கொண்டார். இவரது முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த இரண்டு மகன்களும் தங்கள் தந்தையுடன் வாழ்ந்தனர். மேலும் திரௌபதி 'அம்பிகா' என்ற பெயரைப் பெற்றார். இவர்களுக்கு உக்ர சிங்கா என்ற திபம் ராஜா மகனாகப் பிறந்தார். [4] [5]

கலைப்பணி[தொகு]

அம்பிகா கலையின் சிறந்த புரவலராக இருந்தார். இவரது ஆதரவின் பேரில், அசாமின் சிறந்த அறியப்பட்ட சித்திர கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றான "ஹஸ்திவித்யார்ணவம்" என்ற யானைகளைப் பற்றிய புகழ்பெற்ற கையெழுத்துப் பிரதி எழுதப்பட்டது. ஆறாவது பாகவத புத்தகம், கவிச்சந்திர திவிஜ்யா என்பவரால் இயற்றப்பட்டதும் பாத லிகிரா என்பவரால் விளக்கப்பட்டதுமான தர்ம புராணம் ஆகியவை அந்தக் காலத்தின் மற்றொரு முக்கியமான கலைப் படைப்புகள்.[5]

இறப்பு[தொகு]

அம்பிகை 1738 இல் சீனாதலி என்ற இடத்தில் இறந்தார். [6] பின்னர் மன்னன் 1739 ஆம் ஆண்டில், மதுரியல் குடும்பத்தைச் சேர்ந்த, பதவி நீக்கம் செய்யப்பட்ட சோலால் கோகனின் மகள் அகாரி கபுரு என்பவரை மணந்து, அவருக்கு பார் ராஜா என்ற பட்டத்தை வழங்கினார். மேலும் அவருக்கு சர்பேசுவரி என்று பெயரையும் சூட்டினார். [7]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Gogoi, Padmeswar (1968) (in en). The Tai and the Tai Kingdoms: With a Fuller Treatment of the Tai-Ahom Kingdom in the Brahmaputra Valley. Department of Publication, Gauhati University. https://books.google.com/books?id=rIduAAAAMAAJ. 
  2. Saikia, Sayeeda Yasmin (1992) (in en). History at the Crossroads: An Analysis of the Satsari Buranji of Assam. University of Wisconsin--Madison. https://books.google.com/books?id=Y0dgAAAAMAAJ. 
  3. Menon, Mady (2020-08-25) (in en). NINU: A Saga of the Valorous Wanchos. Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-64919-932-4. https://books.google.com/books?id=HyD5DwAAQBAJ. 
  4. Bhattacharjee, Jayanta Bhusan (1986) (in en). Studies in the History of North-east India: Essays in Honour of Professor H.K. Barpujari. North-Eastern Hill University. https://books.google.com/books?id=4uQdAAAAMAAJ. 
  5. 5.0 5.1 Gupta, Rajatananda Das (1972) (in en). Eastern Indian Manuscript Painting. D. B. Taraporevala Sons. https://books.google.com/books?id=DxHrAAAAMAAJ. 
  6. Digital, A. T. (2021-01-31). "On the pedestal". assamtribune.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
  7. (Gogoi 1968)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா,_பார்_ராஜா&oldid=3786942" இலிருந்து மீள்விக்கப்பட்டது