உள்ளடக்கத்துக்குச் செல்

அமெலியா புளூமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெலியா புளூமர்
பிறப்புஅமெலியா ஜெங்க்ஸ்
மே 27, 1818
ஓமர், நியூயார்க்கு, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புதிசம்பர் 30, 1894(1894-12-30) (அகவை 76)
அயோவா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
நினைவகங்கள்அமெலியா புளூமர் மாளிகை
தேசியம்அமெரிக்கர்
பணிபெண்களின் உரிமைகள், நிதான இயக்க வழக்கறிஞர்
அறியப்படுவதுபுளூமர் என்ற ஆடை அணிந்த பெண்களை கருத்துகளை விளம்பரப்படுத்துவது
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி லில்லி, செய்தித் தாள்
வாழ்க்கைத்
துணை
டெக்ஸ்டர் புளூமர் (திருமணம் 1840)

அமெலியா ஜெங்க்ஸ் புளூமர் (Amelia Jenks Bloomer) (மே 27, 1818 - டிசம்பர் 30, 1894) ஒரு அமெரிக்க பெண்களின் உரிமைகளுக்காகவும், மதுபானங்களை உட்கொள்வதற்கு எதிரான ஒரு 'நிதான இயக்கம்' என்ற சமூக இயக்கத்துக்காகவும் வாதாடிய ஓர் வழக்கறிஞர் ஆவார். புளூமர்ஸ் எனப்படும் பெண்களின் ஆடை சீர்திருத்த பாணியை இவர் உருவாக்கவில்லை என்றாலும், இவருடைய வலுவான வாதாடும் திறமை காரணமாக இவருடைய பெயர் அதனுடன் தொடர்பு கொண்டுள்ளது. தி லில்லி என்ற செய்தித் தாளுடன் பணிபுரிந்த இவர், பெண்களுக்கான ஒரு செய்தித்தாளை சொந்தமாக நிறுவி, வெளியிட்ட முதல் பெண் ஆனார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அமெலியா, 1818இல் நியூயார்க்கின் ஹோமரில் அனனியாஸ் ஜெங்க்ஸ் - லூசி (வெப்) ஜெங்க்ஸ் ஆகியோருக்கு ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். உள்ளூர் மாவட்ட பள்ளியில் சில வருடங்கள் மட்டுமே தனது கல்வியைப் பெற்றார்.[1]

தொழில்

[தொகு]

17 வயதில் பள்ளி ஆசிரியையாக சிறிது காலம் கழித்த பின்னர், இவர் இடமாற்றம் செய்ய முடிவு செய்தார். பின்னர் புதிதாக திருமணமான சகோதரி எல்விராவுடன் வாட்டர்லூவில் வசித்து வந்தார். ஒரு வருடத்திற்குள் இவர் செனெகா நீர்வீழ்ச்சியில் உள்ள ஓரென் சேம்பர்லைன் குடும்பத்தின் வீட்டிற்குச் சென்று, அவர்களின் மூன்று இளைய குழந்தைகளுக்கான பாதுகாவலராகச் செயல்பட்டார்.[2]

ஏப்ரல் 15, 1840 அன்று, இவருக்கு 22 வயதாக இருந்தபோது, சட்ட மாணவர் டெக்ஸ்டர் புளூமர் என்பவரை மணந்தார், இவரது கணவர் தான் நடத்திவந்த செனெகா பால்ஸ் கவுண்டி கூரியர் என்ற நியூயார்க் செய்தித்தாளில் எழுத இவரை ஊக்குவித்தார். இவரது மதுபானங்களுக்கெதிரான சமூக இயக்கத்தின் ஒரு பகுதியாக இவரது கணவர் தான் குடிப்பதை விட்டுவிட்டார்.[1]

அமெலியா தனது ஆரம்ப ஆண்டுகளை நியூயார்க்கின் கோர்ட்லேண்ட் கவுண்டியில் கழித்தார். பின்னர் தனது கணவருடன் குடும்பத்துடன் 1852இல் அயோவாவுக்கு குடிபெயர்ந்தார்.

சமூகச் செயற்பாடு

[தொகு]

1848ஆம் ஆண்டில், இவர் செனெகா அருவியில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டார். முதல் பெண்களின் உரிமைகள் மாநாடு, எபிஸ்கோபல் தேவாலயத்துடனான ஆழ்ந்த தொடர்பின் காரணமாக, "உணர்ச்சிகளின் பிரகடனத்திலும்", அடுத்தடுத்த தீர்மானங்களில் இவர் கையெழுத்திடவில்லை. இந்த மாநாடு தான் செய்தித்தாளைத் தொடங்க உத்வேகம் அளித்தது.

புளூமர் ஆடை
Depiction of Amelia Bloomer wearing the famous "bloomer" costume which was named after her
அமெலியா புளூமர் புகழ்பெற்ற "புளூமர்" உடையை அணிந்திருப்பது போன்ற வரைபடம்

இறப்பு

[தொகு]

இவர் 1894 இல், தனது 76 வயதில் இறந்தார். அயோவாவிலுள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [3] [4]

Statue immortalizing 1851 meeting of Elizabeth Cady Stanton, Susan B. Anthony & Amelia Bloomer in Seneca Falls, NY
நியூயார்க்கின் செனெகா அருவியில் எலிசபெத் கேடி ஸ்டாண்டன், சூசன் பி.அந்தோனி மற்றும் அமெலியா புளூமர் ஆகியோரின் 1851 சந்திப்பை அழியாத வகையில் உருவாக்கப்பட்ட "வென் அந்தோனி மெட் ஸ்டான்டன்" என்று அழைக்கப்படும் சிலை.

ஜூலை 20 அன்று எபிஸ்கோபல் தேவாலயத்தின் புனிதர்களின் நாட்காட்டியில் இவர் எலிசபெத் கேடி ஸ்டாண்டன், சோஜோர்னர் ட்ரூத், ஹேரியட் டப்மேன் ஆகியோருடன் நினைவுகூரப்படுகிறார். 1975இல் இவர் அயோவாவின் மகளிர் அரங்கில் சேர்க்கப்பட்டார்.[5] 1980ஆம் ஆண்டில் நியூயார்க்கின் செனெகா அருவியிலுள்ள இவரது வீட்டிற்கு 'அமெலியா புளூமர் மாளிகை' என்று பெயரிடப்பட்டது. மேலும், தேசிய வரலாற்று இடங்களின் பதிவேட்டிலும் பட்டியலிடப்பட்டது. 1995இல் இவர் தேசிய மகளிர் அரங்கில் சேர்க்கப்பட்டார். [6] [7] 1999ஆம் ஆண்டில் மே 12, 1851 இல், புளூமர் எலிசபெத் கேடி ஸ்டாண்டனுக்கு சூசன் பி. அந்தோனியை அறிமுகப்படுத்தியதை நினைவுகூரும் வகையில் டெட் ஆப்பின் சிற்பம் வெளியிடப்பட்டது.[8] [9] "வென் அந்தோனி மெட் ஸ்டாண்டன்" என்று அழைக்கப்படும் இந்த சிற்பம், முழு அளவிலான வெண்கல சிலைகளாக சித்தரிக்கப்பட்ட மூன்று பெண்களைக் கொண்டுள்ளது. மேலும் இவர்கள் சந்தித்த நியூயார்க்கின் செனெகா அருவியிலுள்ள வான் கிளீப் ஏரிக்கு அப்பால் வைக்கப்பட்டுள்ளது.[9] [8] 2002 முதல் 2020 வரை, அமெரிக்க நூலகச் சங்கம் இளைய வாசகர்களுக்காக குறிப்பிடத்தக்க பெண்ணிய உள்ளடக்கத்துடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்களின் வருடாந்திர அமெலியா புளூமர் பட்டியலை உருவாக்கியது.[10] [11]

நூலியல்

[தொகு]
  • Bloomer, Dexter C. Life and Writings of Amelia Bloomer. Boston: Arena Pub. Co., 1895. Reprinted 1975 by Schocken Books, New York. Includes bibliographical references.
  • Coon, Anne C. Hear Me Patiently: The Reform Speeches of Amelia Jenks Bloomer, Vol. 138. Greenwood Publishing Group, Inc., 1994.
  • Smith, Stephanie, Household Words: Bloomers, sucker, bombshell, scab, cyber (2006) -- material on changing usage of words.
  • The Lily: A Ladies' Journal, devoted to Temperance and Literature. 1849.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 D. C. Bloomer (1895). Life And Writings Of Amelia Bloomer. Universal Digital Library. Arena Publishing Company.
  2. "Weber, Sandra S., "Special History Sturdy", Women's Rights National Historic Park, Seneca Falls, New York, US Department of the Interior, National Park Service, September 1985". Archived from the original on 2014-02-05. Retrieved 2021-09-01.
  3. The Editors (1945-10-24). "Amelia Bloomer | American social reformer". Britannica.com. Retrieved 2017-11-02. {{cite web}}: |last= has generic name (help)
  4. City Clerk. "Cemeteries | Council Bluffs, IA - Official Website". Councilbluffs-ia.gov. Retrieved 2017-11-02.
  5. "1975 Iowa Women's Hall of Fame Honoree: Amelia Jenks Bloomer (1818-1894)". Retrieved 2017-10-28.
  6. "Congressional Record | Congress.gov | Library of Congress". Congress.gov. 1995-09-15. Retrieved 2017-10-28.
  7. "Bloomer, Amelia - National Women's Hall of Fame". Womenofthehall.org. Retrieved 2017-10-28.
  8. 8.0 8.1 "The Freethought Trail". The Freethought Trail. Retrieved 2017-10-28.
  9. 9.0 9.1 "Aub Discusses Commemorative Sculpture - Hobart and William Smith Colleges". .hws.edu. 2013-07-17. Archived from the original on 2017-10-29. Retrieved 2017-10-28.
  10. "Rise: A Feminist Book Project for Ages 0-18". January 27, 2020.
  11. https://www.slj.com/?detailStory=2020-rise-a-feminist-booklist-for-young-readers#:~:text=The%20annual%20feminist%20booklist%20is,Top%2010%20list%20for%202020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெலியா_புளூமர்&oldid=3658084" இலிருந்து மீள்விக்கப்பட்டது