சூசன் பிரவுன் அந்தோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூசன் பிரவுன் அந்தோனி
Susan B Anthony c1855.png
பிறப்புசூசன் பிரவுனெல் அந்தோனி
பெப்ரவரி 15, 1820(1820-02-15)
ஆடம்சு, மாசச்சூசெட்சு, அமெரிக்கா
இறப்புமார்ச்சு 13, 1906(1906-03-13) (அகவை 86)
இரோசெச்டர், நியூ யோர்க், அமெரிக்கா
அறியப்படுவது
கையொப்பம்

சூசன் பிரவுன் அந்தோனி (Susan B. Anthony, பெப்ரவரி 15, 1820 – மார்ச் 13, 1906) என்பவர் அமெரிக்க சமூக சீர்திருத்தவாதி மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். இவர் பெண்கள் வாக்குரிமை இயக்கத்தில் முக்கிய பங்கை வகித்தவர். சமுதாய சம உரிமைக்காகப் போராடிய குடும்பத்தில் பிறந்த அவர் தன்னுடைய 17 ஆம் வயதில் அடிமை முறைக்கெதிராகப் போராடினார். 1856 இல் அடிமை முறைக்கெதிரான நியூயார்க் நகர அமைப்பின் முகவராக நியமிக்கப்பட்டார். மது குடிப்பதையும் எதிர்த்துப் பரப்புரை செய்தவர் ஆவார்.

1872 இல் சூசன் அந்தோனி அவரது பிறந்த இடமான இரோசெசுட்டரில் தேர்தலில் வாக்களித்தமைக்காக கைது செய்யப்பட்டார்.[1] இவர் மீதான வழக்கு விசாரணை அக்காலத்தில் பெரிது பிரசாரப்படுத்தப்பட்டது.[2] இவருக்கு $100.00 தண்டம் விதிக்கப்பட்டது.[3] ஆனாலும் அவர் தண்டம் கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் அவர் மீத்கான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.[4] 1878 இல், அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்ரத்தில்]] பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வர முயற்சி செய்தார். மேலவை உறுப்பினர் ஆரன் சார்செண்ட் என்பவர் இத்திருத்ததை அறிமுகப்படுத்தினார். இறுதியில் 1920 ஆம் ஆண்டில் 19-வது திருத்தச்சட்டம் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

நூல்கள்[தொகு]