அமிர்தம் சூர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமிர்தம் சூர்யா
அமிர்தம் சூர்யா.jpg
பிறப்புஇரா.ந.கதிரவன்
திசம்பர் 16, 1966 (1966-12-16) (அகவை 52)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை
பணிஎழுத்தாளர், இதழ் தலைமை துணையாசிரியர்

அமிர்தம் சூர்யா தமிழின் நவீன இலக்கிய வெளியில் நவீன கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, பத்திரிக்கையாளராக, விமர்சகராகத் தொடர்ந்து 25 வருடங்களாய் இயங்கி வருபவர். கடந்த ஆறு ஆண்டுகளாக கல்கி வார இதழில் தலைமை துணையாசிரியராக பணியாற்றுகிறார்.[சான்று தேவை]

பெயர்க்காரணம்[தொகு]

இவரின் இயற் பெயர் இரா.ந.கதிரவன். தன்னுடைய இயற்பெயரை இவர் சூர்யா என மாற்றிக் கொண்டார். இவர் அமிர்தம் என்ற சிற்றிதழை 1985 களில் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தியதால் “அமிர்தம் சூர்யா” வாகப் பெயர் மாற்றம் கொண்டார். அமிர்தம்மாள் என்பது இவரின் பாட்டி பெயர்.

எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, விமர்சகர் வெங்கட் சாமிநாதன் ஆகியோரால் ஆகச் சிறந்த கவிஞராக பாராட்டப்பட்டவர் ஆவார்.[சான்று தேவை]

குடும்பம்[தொகு]

காஞ்சிபுரம் வேராக இருந்தாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 16-12-1966 ல் பிறந்தவரான அமிர்தம் சூர்யாவின் மனைவி பெயர் லதா. இவருக்கு எல். கே. காவ்ய ப்ரிய தர்ஸன், எல். கே. ஆகாஷ் அக்னி மித்ரன் என்ற இரண்டு மகன்கள்.

வெளிவந்துள்ள படைப்புகள்[தொகு]

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

 • உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை (2000) முன்னுரை-ஜெயமோகன்.
 • பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு (2006) முன்னுரை- ஓவியர் சந்ரு.
 • வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்(2012).

கட்டுரைத் தொகுப்புகள்[தொகு]

 • முக்கோணத்தின் நாலாவது பக்கம்(2001) [1]

முன்னுரை- விமர்சகர்.வெங்கட்சாமிநாதன்.

கதைத் தொகுப்புகள்[தொகு]

 • கடவுளை கண்டுபிடிப்பவன் (2009)(14 சிறுகதைகளின் தொகுப்பு).

நாவல்[தொகு]

 • தற்போது ஒரு பெரும் நாவல் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பத்திரிக்கை பங்களிப்புகள்[தொகு]

 • சித்தர்கள் மீதான நம்பிக்கையும் அதன் மீதான தேடலும்கொண்டவர். தீபம் (ஆன்மிக இதழ்) இதழில் சித்தர்களின் ஜீவ சமாதிகளைத் தேடி ஒரு பயணமாக ”ஆசிபெறலாம் வாங்க” என்ற தலைப்பில் 16 வாரம் தொடர் எழுதியவர்.
 • கல்கி வார இதழில் ”தவணைமுறை தற்கொலை” என்ற தலைப்பில் குடியிலிருந்து மீளும் வழிமுறை சொல்லும் 16 வாரம் தொடர் எழுதியவர்.

பெற்றுள்ள விருதுகள்[தொகு]

 • திருப்பூர் தமிழ் சங்க விருது.
 • தினகரன் பரிசு
 • ஸ்டேட் பாங்க் அவார்ட் விருது-
 • எழுச்சி அறக்கட்டளை விருது(சிறந்த நாடக ப்ரதிக்காக)-
 • சி.கனகசபாபதி விருது-

சமூகப்பணி[தொகு]

 • விளிம்பு நிலை (கார்ப்பரேஷன் பள்ளி)மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்து பயிற்சி அளித்து சிறுவர்களுக்களுக்கான இலக்கியத்தை சிறுவர்களையே எழுத வைத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டது.
 • மானுடம் என்ற அறக்கட்டளையின் ஒரு அறங்காவலராய் [2] இருந்து ஏழை பிள்ளைகளுக்கு (பத்தாம் வகுப்பு வரை) இரவு பாடசாலை நடத்தி வருவது
 • சிறுவர்களுக்கு சிறுவர்களால் நடத்தும் ஒரு சிற்றிதழுக்கு ஆலோசகராய் இருந்து சிறுவர்களுக்கு வழிகாட்டுவது.

இலக்கியப் பணி[தொகு]

தமிழகம் முழுதும் கல்லூரிகளுக்கு சென்று தமிழ் வளர்ச்சி மற்றும் இலக்கிய மன்றச் சொற்பொழிவு[3], இலக்கிய நூல் விமர்சன[4] உரையாற்றி மாணவர்களிடையே பரவலாக அறியப்பட்டவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

அமிர்தம் சூர்யாவின் வலைப்பூ

மேற்கோள்கள்[தொகு]

 1. 'கடவுளைக் கண்டுபிடிப்பவன்' - அமிர்தம் சூர்யா
 2. பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு! - அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு லதா ராமகிருஷ்ணன் திண்ணை இதழ்
 3. இலக்கிய சொற்பொழிவு
 4. இலக்கிய நூல் விமர்சனம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தம்_சூர்யா&oldid=2718865" இருந்து மீள்விக்கப்பட்டது