அமன் குமார் நாக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமன் குமார் நாக்ரா
Aman Kumar Nagra
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1998–1999
முன்னையவர்சூரச்சு பன்
பின்னவர்இரத்தன் லால் கத்தாரியா
தொகுதிஅம்பாலா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மே 1955 (1955-05-10) (அகவை 68)
தபு கமல்பூர், யமுனாநகர் மாவட்டம்
அரசியல் கட்சிமானவ் சமாச் சேவா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பகுசன் சமாச்சு கட்சி
அரியானா முன்னேற்றக் கட்சி
துணைவர்புசுபா நாக்ரா (மீரா)
வாழிடம்(s)இயகாத்ரி, யமுனா நகர் தொகுதி
கல்விஅரசியல் அறிவியலில் முது கலை பட்டம்
முன்னாள் கல்லூரிமுகந்து லால் தேசியக் கல்லூரி
தொழில்சமூக சேவகர்

அமன் குமார் நாக்ரா (Aman Kumar Nagra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1955 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று இவர் யமுனா நகர் மாவட்டத்திலுள்ள தபு கமல்பூரில் பிறந்தார். பகுசன் சமாச்சு கட்சியின் உறுப்பினராக அரியானாவில் உள்ள அம்பாலா தொகுதியில் போட்டியிட்டு இந்தியாவின் 12ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் சூரச்சு பானை 2,864 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார். 2002 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியில் மானவ் சமாச்சு சேவா கட்சியை நிறுவினார்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
  2. "Ambala MP active in Lok Sabha, not in seat?". பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
  3. "Aman Kumar Nagra (Criminal & Asset Declaration)". பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
  4. "Former MP arrested". பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
  5. "BSP's CM nominee to contest from two seats". பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமன்_குமார்_நாக்ரா&oldid=3838954" இலிருந்து மீள்விக்கப்பட்டது