சூரஜ் பன்
சூரஜ் பன் Suraj Bhan | |
---|---|
सूरज भान | |
சூரஜ் பன் | |
தலைவர் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் | |
பதவியில் 2004 - 2006 | |
பின்னவர் | பூட்டா சிங் |
14வது [[இமாச்சலப்பிரதேச ஆளுநர்]] | |
பதவியில் 23 நவம்பர் 2000 – 7 மே 2003 | |
முதலமைச்சர் | பிரேம் குமார் துமால் வீரபத்ர சிங் |
முன்னையவர் | விஷ்ணு காந்த் சாத்திரி |
பின்னவர் | விஷ்ணு சதாசிவ கோக்ஜே |
23வது [[உத்தரப்பிரதேசம் ஆளுநர்]] | |
பதவியில் 20 ஏப்ரல் 1998 – 23 நவம்பர் 2000 | |
முதலமைச்சர் | கல்யாண் சிங் இராம் பிரகாசு குப்தா ராஜ்நாத் சிங் |
முன்னையவர் | முகம்மது சபி குரோசி {{{1}}} |
பின்னவர் | விஷ்ணு காந்த் சாத்திரி |
பீகார் ஆளுநர் (பொறுப்பு) | |
பதவியில் 6 அக்டோபர் 1999 – 23 நவம்பர் 1999 | |
முதலமைச்சர் | ராப்ரி தேவி |
முன்னையவர் | பி. எம். இலால் (பொறூப்பு) |
பின்னவர் | வி. ச. பாண்டே |
11வது மக்களவை துணை சபாநாயகர் | |
பதவியில் 12 சூலை 1996 – 4 திசம்பர் 1997 | |
இந்திய மக்களவைத் தலைவர் | பி. ஏ. சங்மா |
முன்னையவர் | சித்தநஞ்சப்பா மல்லிகார்ஜுனையா |
பின்னவர் | பி. எம். சையது |
22வது விவசாயத் துறை அமைச்சகம் (இந்தியா)விவசாயத் துறை அமைச்சர் | |
பதவியில் 16 மே 1996 – 1 சூன் 1996 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | ஜெகந்நாத் மிஸ்ரா |
பின்னவர் | தேவ கௌடா |
நாடாளுமன்ற உறுப்பினர்- அம்பாலா (அரியானா) | |
பதவியில் 1967–1970; 1977–1979; 1979–1984; 1996–1997 | |
எதிர்க்கட்சித் தலைவர்-அரியானா சட்டப்பேரவை | |
பதவியில் 1989–1990 | |
வருவாய் துறை அமைச்சர் | |
பதவியில் 1987–1989 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | யமுனா நகர், இந்தியா | 1 அக்டோபர் 1928
இறப்பு | 6 ஆகத்து 2006 தில்லி, இந்தியா | (அகவை 77)
காரணம் of death | மாரடைப்பு |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சூரஜ் பன் (Suraj Bhan)(1 அக்டோபர் 1928 – 6 ஆகத்து 2006) முன்னாள் ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார்.
இளமை
[தொகு]சூரஜ் பன் பன்சுவால் 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அரியானாவின் யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள மெக்லான்வாலியில் சமர் சமூகத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் குருச்சேத்திரப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலைச் சட்டம் படித்தார்.[1]
ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தின் தொண்டராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] இவரது மகன் அருண் குமாரும் பாஜகவில் தொடர்புடையவர். அரியானா மாநகராட்சி தேர்தலின் பொறுப்பாளராக உள்ளார்.[3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]சூரஜ் பன் பாரதிய ஜனசங்கத்துடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இது இறுதியில் பாரதிய ஜனதா கட்சியாக மாறியது. தீவிர அரசியலில் சேர்ந்த பிறகு இவரது கடைசி பெயரான "பான்சுவாலைக்" கைவிட்டார். 4வது (1967–1970), 6வது (1977–1979), 7வது (1979–1984) மற்றும் 11வது மக்களவை (1996–1997) ஆகியவற்றில் அரியானாவின் அம்பாலா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[4] 1987-ல், இவர் அரியானா சட்டமன்றத்திற்குச் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவி லால் அரசாங்கத்தில் வருவாய் அமைச்சராக பணியாற்றினார் (1987-1989). தேவி லாலின் கட்சியுடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்ட பிறகு, இவர் அரியானா சட்டமன்றத்தில் (1989-1990) எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார். 1984-ல் பாரதிய ஜனதா கட்சியின் அரியானா மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5] 1996ஆம் ஆண்டில், இவர் வாஜ்பாயின் முதல் அமைச்சகத்தில் விவசாய அமைச்சராக இருந்தார். இதன் பிறகு மக்களவையின் துணைச் சபாநாயகராக (1996-1997) பணியாற்றினார். இவர் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால் உத்தரப்பிரதேசம் (1998-2000), இமாச்சலப் பிரதேசம் (2000-2003), பின்னர் பீகார் ஆளுநராக (1999) நியமிக்கப்பட்டார்.[6] 2002ஆம் ஆண்டில், முன்னாள் இராசத்தான் முதல்வர் பைரோன் சிங் சேகாவத்தின் வேட்புமனு மீது பாஜகாவில் மறுபரிசீலனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சூரஜ் பானும் இந்தியத் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் இணைந்தார்.[7]
- பிப்ரவரி 2004 -ல், இவர் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.[8]
இறப்பு
[தொகு]சூரஜ் பன், 6 ஆகத்து 2006 அன்று புது தில்லியில் 77 வயதில் உடல் உறுப்புகள் செயலிழந்ததைத் தொடர்ந்து மாரடைப்பால் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑
{{cite book}}
: Empty citation (help) - ↑ Subhash Mishra (3 April 2000). "Family Face-Off". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ Jaskaran Singh (Apr 2, 2019). "Ambala: Ex-MP Suraj Bhan's son Arun Kumar among BJP probables - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
- ↑ "Biographical Sketch of Member of XI Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
- ↑ "List of Ex State Presidents".
- ↑ "Bihar Governor sacks underage minister". https://indianexpress.com/article/news-archive/bihar-governor-sacks-underage-minister/.
- ↑ "Suraj Bhan joins race for VP's post". பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
- ↑ "SC/ST Commission Chairman Suraj Bhan dead". பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.