அப்பெல்லா
Jump to navigation
Jump to search
அப்பெல்லா (Apella, கிரேக்கம்: Ἀπέλλα ) என்பது பண்டைய கிரேக்க நகர அரசான எசுபார்த்தாவின் பிரபலமான மக்கள் விவாத அவையாகும். இது மற்ற கிரேக்க நகர அரசுகளில் உள்ள குடிமக்கள் பொது அவையை ஒத்தது. முப்பது வயது நிறைந்த ஒவ்வொரு எசுபார்டாவின் ஆடவர்கள் அனைவரும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ள உரிமை உண்டு. லைகர்கசின் கட்டளைப்படி, எசுபார்த்தாவின் எல்லைக்குள் ஒவ்வொரு முழு நிலவு நாளிலும் இந்த அவை நடத்தப்பட வேண்டும்.[1] அரசாங்கம் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையைம், இயற்றப்படுகின்ற எந்த சட்டமும் இதன் அங்கிகாரத்தைப் பெற்றபின்பே அமலுக்கு வரவேண்டும் எனபது நியதி. ஆனால் இது ஒரு சம்பிரதயமாகவே இருந்துவந்ததாக தெரிகிறது.
குறிப்புகள்[தொகு]
- ↑
ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Tod, Marcus Niebuhr (1911). "Apella". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 2. Cambridge University Press.