அப்துல் சலீல் மசுதான்
Appearance
அப்துல் சலீல் மசுதான் Abdul Zalil Mastan | |
---|---|
பதிவுத்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் பீகார் அரசு | |
பதவியில் 20 நவம்பர் 2015 – 16 சூலை 2017 | |
முதலமைச்சர் | நித்திசு குமார் |
துணை முதல்வர் | தேசசுவி யாதவ் |
உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் 2015–2020 | |
முன்னையவர் | சபா சாபர் |
பின்னவர் | அக்தருல் இமாம் |
தொகுதி | அமவுர் |
பதவியில் 2000–2010 | |
பதவியில் 1985–1995 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
அப்துல் சலீல் மசுதான் (Abdul Zalil Mastan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஐந்தாவது நிதிசு குமார் அமைச்சரவையில் பதிவுத்துறை , கலால் மற்றும் மதுவிலக்குத் துறைகளின் அமைச்சராக இருந்தார். அப்துல் சலீல் மசுதான் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார்.[1][2] அமவுர் சட்டமன்ற தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு 1985 ஆம் ஆண்டு முதல் ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகாரின் கோசி-சீமாஞ்சல் பகுதியில் அவருக்கு வலுவான ஆதரவு உள்ளது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் அக்தாருல் இமான் என்பவரால் அப்துல் சலீல் மசுதான் தோற்கடிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Abdul Jalil Mastan(Indian National Congress(INC)):Constituency- AMOUR(PURNIA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
- ↑ "Abdul Jalil Mastan Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.