உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் சலாம் அசிமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் சலாம் அசிமி
Abdul Salam Azimi
பிறப்பு1936
பரா மாகாணம்
குடியுரிமைஆப்கானித்தான்
பணிஆப்கானிசுத்தான் தலைமை நீதிபதி

அப்துல் சலாம் அசிமி (Abdul Salam Azimi) ஆப்கானிசுத்தான் நாட்டின் பரா மாகாணத்தில் 2006ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஆப்கானிசுத்தானின் முதன்மை நீதிபதியாக இருந்தார்.[1] ஆப்கானிசுத்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைவராகவும் இவர் இருந்தார். அப்துல் சலாம் 1936ஆம் ஆண்டில் பிறந்தார்.

அமெரிக்காவின் ஒமாகாவில் உள்ள நெப்ராசுகா பல்கலைக்கழகத்தில் முன்னாள் பேராசிரியராக இருந்த இவர் ஆப்கானிசுதான் நாட்டின் குடியரசுத் தலைவர் அமீத் கர்சாயின் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். ஆப்கானிசுத்தானின் 2004 ஆம் ஆண்டு அரசியலமைப்பை எழுத அப்துல் சலாம் உதவினார். அலிசாய் பழங்குடியினரின் பசுட்டூன் இனத்தைச் சேர்ந்த இவர் 1979ஆம் ஆண்டு சோவியத் படையெடுப்புக்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் ஆப்கானிசுத்தானின் காபூல் மாகாணத்தில் வசித்து வந்தார். 1981ஆம் ஆண்டு பொதுவுடமைக் கட்சியின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் உள்நாட்டுப் போர் மூண்டது. இதனால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது.

அப்துல் சலாமுக்கு மூன்று மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இதில் ஒருவர் அப்துல் கபார் அசிமி.ஓமாகா, நெப்ராசுகாவில் படித்தவர் ஆவார். ஓமகாவில் உள்ள நெப்ராசுகா பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றார். மற்றொருவர் அனான் அசிமி. இவரும் ஓமகாவில் உள்ள நெப்ராசுகா பல்கலைக்கழகத்தில் படித்தார். ஓமாகா பகுதியில் மரியாதைக்குரிய ஆசிரியராகத் திகழ்ந்தார். ஒரு தலைமை நீதிபதியாக அப்துல் சலாம் அசிமி உயர்கல்வி ஏதும் படிக்காத பழமைவாத இசுலாமிய மதகுருவான பைசல் அகமது சின்வரிக்கு மாற்றாக உருவானார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலும் நாட்டின் பாழடைந்த சட்ட அமைப்பை மேம்படுத்துவதில் ஒரு நியாயமான சிந்தனையுள்ள மிதவாதியாகவும் அப்துல்சலாம் அசிமி நற்பெயரைப் பெற்றவராக வாழ்ந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_சலாம்_அசிமி&oldid=3857636" இலிருந்து மீள்விக்கப்பட்டது