ஒமாகா, நெப்ராசுக்கா
ஒமாகா என்பது நெப்ராசுக்கா மாநிலத்தின் பெரிய நகரமாகும். டக்ளசு கவுண்ட்டியின் நிருவாக தலைமையிடமாகவும் உள்ளது. மிசோரி ஆற்றுடன் பிளாட்டே ஆறு கலக்குமிடத்திற்கு மேல் 10 மைல் தொலைவில் மிசௌரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் 40வது பெரிய நகரமாகும். 2018இல் இதன் மக்கள் தொகை 466,061. பெரு நகர ஒமாகா அமெரிக்காவின் 59வது பெரிய பெரு நகரமாகும்.[1][2][3]
மிசௌரியின் கிழக்கு கரையில் இருந்த கவுண்சில் பிளப், ஐயாவோ நகரை சேர்ந்த சிலரால் மிசௌரி ஆற்றை கடந்து அமெரிக்க மேற்கை நோக்கி செல்லவதற்காக 1854இல் ஒமாகா மிசௌரியின் மேற்கு கரையில் உருவாக்கப்பட்டது. இதனால் ஒமாகாவுக்கு அமெரிக்க மேற்கின் நுழைவாயில் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. 1898இல் ஒமாகாவில் நடந்த உலக கண்காட்சியில் அமெரிக்க மேற்கிலிருந்து வைக்கப்பட்ட கடைகள் மூலம் அமெரிக்க மேற்கு வெளியுலகுக்கு நன்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் நடுவில் ஒமாகா இருப்பதால் 19ஆம் நூற்றாண்டில் போக்குவரத்து கூடுதுறையாக ஒமாகா விளங்கியது. 19ஆம் நூற்றாண்டு முழுக்க போக்குவரத்தும் மொத்த வியாபாரமும் இந்நகரின் சிறப்பாக விளங்கியது. மேலும் நிறைய சாராய ஆலைகளும் இங்கிருந்தன. 19ஆம் நூற்றாண்டில் உலகின் பெரும் மாட்டுத்தொழுவத்திற்காகவும், மாட்டிறைச்சி கூடத்திற்காகவும் புகழ் பெற்று விளங்கியது.
2019இல் பல் தொழில் பெரும் நிறுவனமான பெக்சையர் ஆத்தவே, நிதி காப்பீட்டு நிறுவனமான ஒமாகா மியூட்சுவல், யூனியன் பசிபிக், கெவிட், அமெரிடிரேட், வெர்னர் எண்டர்பிரைசு போன்ற பல பெரும் நிறுவனங்கள் தலைமையிடமாக ஒமாகா உள்ளது.
வரலாறு
[தொகு]ஒமாகா, பான்கா முதலான பல அமெரிக்க தொல்குடி மக்கள் இப்பகுதியில் வசித்து வந்தனர். 17ஆம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் கீழ் ஒகையோ ஆற்று பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இப்பகுதிக்கு குடியேறினர். ஒமாகா தொல்குடிகள் இந்நிலத்தை அமெரிக்க அரசுக்கு விட்டுவிட்டு சென்றனர், ஒமாகா தொல்குடிகளின் பெயராலயே இந்நகருக்கு பெயர் ஏற்பட்டது. 1804 இல் மிசௌரி உற்பத்தியாகும் இடத்தை காண சென்ற லியிசும் வில்லியம் கிளார்க்கும் ஒமாகா அமைந்துள்ள ஆற்றங்கரையின் வழியே சென்றனர். அப்போது வில்லியம் கிளார்க்கும் லியிசும் மிசௌரியின் தொல்குடி தலைவரை கவுண்சில் பிளப்புக்கு வடக்கே 20 மைல் தொலைவில் தற்போதைய வடக்கு ஒமாகாவில் சந்தித்து பேசினார்கள். உடனடியாக அவர்கள் சந்தித்தற்கு தெற்கே நிறைய மென்தோல் வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன. மென்தோல் வணிகர்களிடையே கடும் போட்டி இருந்தது. அமெரிக்க மென்தோல் நிறுவனம் உருவான பின்பே போட்டி நின்றது. கவுண்சில் பிளப்பிலிருந்து வந்தவர்களே முதலில் இங்கு குடியேறினர்.
வில்லியம் பிரௌன் லோன் ட்ரீ என்ற படகு போக்குவரத்தை கவுண்சில் பிளப்புக்கும் ஒமாகாவுக்கும் இடையே மிசௌரி ஆற்றில் நடத்தி வந்தார். அப்படகு மூலம் கவுண்சில் பிளப்பிலிருந்து ஒமாகாவுக்கு மக்களை கொண்டுவந்தார். ஒமாகா இப்படி இருக்கவேண்டும் என முதலில் நினைத்தவர் பிரௌன். 1842இல் ஏற்பட்ட கான்சசு-நெப்ராசுக்கா சட்டம் மூலம் ஒமாகாவை சுற்றியிருந்த பகுதிகளை பக்கத்து கவுண்சில் பிளப் நகர மக்கள் உரிமை தடுக்கப்பட்டது. இப்பகுதியின் நிருவாக தலைநகராக ஒமாகா விளங்கியது. நெப்ராசுக்கா மாநிலம் உருவாக்கப்பட்டவுடன் ஒமாகாவுக்கு தென் மேற்கே 53 மைல் தொலைவில் உள்ள லிங்கனுக்கு தலைநகரம் மாற்றப்பட்டது.
19ஆம் நூற்றாண்டு
[தொகு]19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதன் பொருளாதாரம் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் கண்டது. ஒமாகா குடியேற்றவாசிகளும் அமெரிக்க மேற்கில் சுரங்க வேலைக்கு நிலம் வழியாகவும் மிசௌரி ஆற்று வழியாக செல்பவர்களும் தங்கி செல்லும் இடமாக திகழ்ந்தது. 1883இல் உருவாக்கப்பட்ட யூனியன் மாட்டுத்தொழுவம் நகரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. 20 ஆண்டுகளுக்குள்ளாக அமெரிக்காவில் உருவான ஐந்து பெரிய இறைச்சி கூடங்களில் நான்கு இங்கு தோன்றின. 1950ஆம் ஆண்டுக்குள் நகரின் வேலையாட்களில் பாதி பேர் இறைச்சி கூடங்களில் பணி புரிந்தனர். 19ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை இறைச்சி கூடங்களும் மொத்த வணிகமும் தொடருந்து போக்குவரத்தும் நகரின் வளர்ச்சிக்கு சிறப்பு பங்காற்றின. 1862இல் அமெரிக்க கீழவை யூனியன் பசிபிக் இருப்புப்பாதை நிறுவனம் மேற்கு நோக்கி இருப்புப்பாதையை கட்ட அனுமதி அளித்தது. 1866இல் இது ஒமாகாவுக்கு வெளியே கட்டத்தொடங்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mullens, P.A. (1901) Biographical Sketches of Edward Creighton and John A. Creighton. Creighton University. p. 24.
- ↑ "ArcGIS REST Services Directory". United States Census Bureau. Archived from the original on January 19, 2022. Retrieved September 18, 2022.
- ↑ "2020 Population and Housing State Data". United States Census Bureau. Archived from the original on August 24, 2021. Retrieved August 22, 2021.