அப்துல் அச்சீசு
Appearance
அப்துல் அச்சீசு (Abdul Aziz) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாம் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்
[தொகு]அப்துல் அச்சீசு 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இந்தியாவில் ஒரு வங்காள முசுலிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கனிசைல் அப்துல் லத்தீப் என்பவராவார். 1988 ஆம் ஆண்டில் இவர் தனது உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழைப் பெற்றார், பின்னர் அசுமா பேகத்தை மணந்தார். [1]
தொழில்
[தொகு]அப்துல் அச்சீசு அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு தொழிலதிபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார், அதில் இவர் அகில இந்திய ஐக்கிய சனநாயக முன்னணி கட்சியை பதர்பூர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Desk, Sentinel Digital (2021-03-29). "Abdul Aziz from Badarpur: Early Life, Controversy & Political Career - Sentinelassam" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
- ↑ "Abdul Aziz | Assam Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
- ↑ "Chief Electoral Officer, Assam" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.