உள்ளடக்கத்துக்குச் செல்

அபிராமி ராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிராமி ராமநாதன்
பிறப்பு26 ஆகத்து 1947 (1947-08-26) (அகவை 77)
பூலாங்குறிச்சி, சிவகங்கை
பணிதொழிலதிபர்
வாழ்க்கைத்
துணை
நல்லம்மை ராமநாதன்
விருதுகள்கலைமாமணி விருது

அபிராமி ராமநாதன் (ஆங்கில மொழி: Abirami Ramanathan) (பிறப்பு:1947) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபராவார். சென்னையில் உள்ள பிரபலமான அபிராமி மெகா மால் மற்றும் அபிராமி திரையரங்குகளின் உரிமையாளராக உள்ளார்.[1] திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும், இந்திய திரைப்பட கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.[2] இவர் பல்வேறு நிகழ்வுகளுக்கு நன்கொடையாளராகவும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் புரவலராகவும் உள்ளார்.[3]

அபிராமி மால் இடித்துக்கட்ட அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஏலம் அளிக்கப்பட்டதில் வரி ஏய்ப்பு நடந்தாகக் கூறி இவரிடம் வருமானவரிச் சோதனை 2023 நவம்பரில் நடைபெற்றது[4]. இவரது அலுவலகத்திலும் வீட்டிலும் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத நகைகள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.[5]


தனி வாழ்க்கை

[தொகு]

சிவகங்கை மாவட்ட பூலாங்குறிச்சியில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் நாள் சிவலிங்கம் செட்டியார், மீனாட்சி ஆச்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[6] இவர் பொறியியலிலும் ஹோமியோபதி மருத்துவத்திலும் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இவரது மனைவி நல்லம்மை ராமநாதனாவார்.[7]

திரைத்துறை

[தொகு]

இவரது தந்தையைப் போலப் பல பல திரைப்படங்களுக்கு நிதி விநியோகம் செய்து வந்தார். சென்னை புரசைவாக்கத்தில் அபிராமி மற்றும் பால அபிராமி என்ற திரையரங்குகளை 1976 இல் கட்டினார். திரைத்துறையில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் இருந்துவருகிறார். உன்னோடு கா என்ற திரைப்படத்திற்கு கதை எழுதினார்.[8]

தயாரித்த படங்கள்

[தொகு]

விருதுகள்

[தொகு]

இவர் பெற்றுள்ள விருதுகளின் பட்டியல்.

  • கலைமாமணி
  • ராஜ சண்டோ விருது
  • ஸ்டார் சினிமா விருது
  • சேவா ரத்னா விருது
  • ஆன்மீகச் செம்மல்
  • பிரதமர் ராஜிவ் கந்தி விருது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "போயஸ் கார்டனில் அலுவலகம்.. தியேட்டர், மால்களுக்கு ஓனர்.. பறக்கும் IT ரெய்டு - யார் இந்த அபிராமி ராமநாதன்?". ஆசியாநெட். https://tamil.asianetnews.com/tamilnadu/it-raid-in-various-places-owned-by-abirami-ramanathan-who-is-he-ans-s3lbf2. பார்த்த நாள்: 4 November 2023. 
  2. "2009 செய்திக் குறிப்பு" (PDF). தமிழக அரசு. பார்க்கப்பட்ட நாள் 4 November 2023.
  3. "if-you-can-i-can-if-ramanathan-can-you-can". mariebanu.com. பார்க்கப்பட்ட நாள் 4 November 2023.
  4. "கணக்கில் வராத நகைகள்; அபிராமி ராமநாதனிடம் ஐ.டி அதிகாரிகள் விசாரணை". நக்கீரன். https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/it-officer-interrogating-abirami-ramanathan. பார்த்த நாள்: 4 November 2023. 
  5. "தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனை குறிவைத்த வருமான வரித்துறை.. ரெய்டில் சிக்கிய நகைகள்.. தீவிர விசாரணை Read more at: https://tamil.oneindia.com/news/chennai/it-raid-at-abirami-ramanathan-house-and-office-in-chennai-554177.html". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/chennai/it-raid-at-abirami-ramanathan-house-and-office-in-chennai-554177.html. பார்த்த நாள்: 4 November 2023. 
  6. "அபிராமி ராமநாதன்". மாலைமலர். http://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2016/07/27221613/1028744/cine-history-Abirami-Ramanathan-record.vpf. பார்த்த நாள்: 4 November 2023. 
  7. "தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் இல்லதிருமண வரவேற்பு..! அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் நேரில் வாழ்த்து!". ஆசியநெட். https://tamil.asianetnews.com/cinema/producer-abirami-ramanathan-marriage-reception-news-rpnv28. பார்த்த நாள்: 4 November 2023. 
  8. "உன்னோடு கா". imdb. https://www.imdb.com/title/tt5717002/?ref_=nmbio_mbio. பார்த்த நாள்: 4 November 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிராமி_ராமநாதன்&oldid=3820930" இலிருந்து மீள்விக்கப்பட்டது