உள்ளடக்கத்துக்குச் செல்

அபிராமி அந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அபிராமியந்தாதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம் திருக்கடையூராகும். ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்.

அபிராமி அந்தாதி ஆய்வு

[தொகு]

தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்டம் பெற்றிருக்கின்றார். இவரது ஆய்வேடு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பின் தருமை ஆதீனத்தின் ஞானசம்பந்தப் பதிப்பக வெளியீடாக “அபிராமி அந்தாதி ஆராய்ச்சி” என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றிருக்கின்றது. அபிராமி அந்தாதிப் பாடல்களை விளக்கி “அபிராமி அந்தாதி விளக்கவுரை” எனும் தலைப்பிலும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிராமி_அந்தாதி&oldid=3686941" இலிருந்து மீள்விக்கப்பட்டது