அபிடோஸ் (தார்தனெல்சு நீரிணை)
அபிடோஸ் Ἄβυδος (in Ancient Greek) | |
---|---|
![]() மாசிடோனிய தங்க ஸ்டேட்டர் நாணயம், அபிடோஸ் நாணயச் சாலை. 323–317 அல்லது 297 கி.மு. | |
இருப்பிடம் | சானக்கலே, கனக்கலே மாகாணம், துருக்கி |
பகுதி | Mysia |
ஆயத்தொலைகள் | 40°11′43″N 26°24′18″E / 40.19528°N 26.40500°E |
வகை | குடியேற்றம் |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு சு. 670 [1] |
பயனற்றுப்போனது | சு. 1304-1310/1318[2] |
பகுதிக் குறிப்புகள் | |
பொது அனுமதி | கட்டுப்படுத்தப்பட்டது |
அபிடோஸ் (Abydos (Hellespont), பண்டைக் கிரேக்கம்: Ἄβυδος, இலத்தீன்: Abydus ) என்பது மைசியாவின் ஒரு பழங்கால நகரம் மற்றும் கிறித்துவ ஆயரின் தலைமையகமாக இருந்த இடமாகும்.[nb 1] இது ஹெலஸ்பாண்டின் ஆசிய கடற்கரையில் (தார்தனெல்சு நீரிணை), பண்டைய நகரமான செஸ்டோசுக்கு எதிரே மற்றும் துருக்கியில் உள்ள சானக்கலே நகருக்கு அருகில் உள்ள நாரா பர்னு ப்ரோமென்ட்டரியில் அமைந்துள்ளது. அபிடோஸ் சு. கிமு 670 களில் நீரிணையில் மிகக் குறுகிய இடத்தில், [1] ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய இடங்களில் ஒன்றாக இருந்தது. இதன் முக்கியத்துவம் 13 ஆம் நூற்றாண்டுவரை நீடித்ததாக தெரிகிறது. [4] 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அபிடோஸ் நகரம் கைவிடப்பட்டது. [2]
அபிடோசானது கிரேக்கத் தொன்மவியலில், ஹீரோ மற்றும் லியாண்டரின் தொன்மங்களில் லியாண்டரின் இருப்பிடமாக கூறப்படுகிறது. [5] 12 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளரான தியோடர் ப்ரோட்ரோமோஸ் எழுதிய புதினமான ரோடந்தே அண்ட் டோசிக்கிள்சில் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. [6]
தொல்லியல்[தொகு]
1675 ஆம் ஆண்டில், அபிடோசின் தளம் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. பின்னர் ராபர்ட் வூட், ரிச்சர்ட் சாண்ட்லர், ஜார்ஜ் கோர்டன் பைரன் போன்ற ஏராளமான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் பயணிகள் பார்வையிட்டனர். [7] நகரின் அக்ரோபோலிஸ் துருக்கியில் மால் டெப் என்று அழைக்கப்படுகிறது. [8]
நகரம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, அபிடோசின் இடிபாடுகள் கிபி 14 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை கட்டுமான மூலப் பொருட்களுக்காக உடைத்து எடுக்கபட்டன. [9] மேலும் இங்கிருந்த சுவர்கள் மற்றும் கட்டிடங்களின் எச்சங்கள் குறைந்தபட்சம் 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பதிவாகியுள்ளன. இருப்பினும், சிறிய எச்சங்கள் எஞ்சியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தடைசெய்யப்பட்ட இராணுவ மண்டலமாக இப்பகுதி அறிவிக்கப்பட்டது, இதனால் சிறிய அளவில் கூட அகழ்வாயுவுகள் நடைபெறவில்லை. [7] [10]
குறிப்புகள்[தொகு]
அடிக்குறிப்புகள்
- ↑ 1.0 1.1 Hansen & Nielsen (2004), p. 993
- ↑ 2.0 2.1 Leveniotis (2017), pp. 13-14
- ↑ For Abydos within Mysia, see
- Grainger (1997), p. 675
- Allen & Neil (2003), p. 189
- Bean (1976), p. 5
- ↑ Kazhdan (1991) "Kallipolis" (A. Kazhdan), pp. 1094–1095
- ↑ Hopkinson (2012)
- ↑ Kazhdan & Wharton (1985), p. 202
- ↑ 7.0 7.1 Gunter (2015), p. 1
- ↑ Bean (1976), p. 5
- ↑ Leveniotis (2017), p. 3
- ↑ Archivum Callipolitanum II. A Catalogue of Ancient Ports and Harbours