அன்வேஷி மகளிர் ஆலோசனை மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்வேஷி மகளிர் ஆலோசனை மையம் (Anweshi Women's Counselling Centre) என்பது கேரளா கோழிக்கோடு மாவட்டத்தை தளமாகக் கொண்டு 1993 ஆம் ஆண்டு முதல் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இயங்கி வரும் ஒரு அரசு சாரா அமைப்பாகும், இது முன்னாள் நக்சல்பாரி தலைவரான கே. அஜிதா நிறுவியதாகும். கேரளாவில் கோழிக்கோடு நகரில் இளம் பருவப் பெண்கள் மற்றும் இளம் பெண்களை 'பாலியல் மோசடிகளில்' சிக்கவைக்கும் அமைப்புகளை அம்பலப்படுத்தும் ஒரு சவாலான பணியில் அன்வேஷி இயக்கம் ஈடுபட்டுவருகிறது.[1]

அன்வேஷி மகளிர்ஆலோசனை மையம் (சுருக்கமாக அன்வேஷி ) என்பது 1860 ஆம் ஆண்டின் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் பிரிவு 21 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்கள் நல அமைப்பாகும்.[2] இந்த மையம் 1996 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கேரள ஸ்திரீ வேதி (கேரள பெண்கள் மன்றம்) என்று அழைக்கப்படும் கேரளாவில் உள்ள சிறிய, தீவிர, பெண்கள் விடுதலை குழுக்களின் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் அன்வேஷி பெண்கள் ஆதரவு மற்றும் வக்கீல் மையம் என்ற திட்டம் ஜனவரி 2000 இல் தொடங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குடும்ப, பாலியல் வன்முறை பிரச்சினையை முன்னிலைப்படுத்துவதற்கும், இதுபோன்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய நீதி பெறுவதற்கான போராட்டத்திற்கும் உதவுவதற்காகவே இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது. வடக்கு கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கினாலும் அருகிலுள்ள மலப்புரம், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளிலும் பங்கெடுத்து போராடிவருகிறது. [3]

செயல்பாடுகள்[தொகு]

  • பாலியல் கொடுமை செய்யப்பட்ட மற்றும் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் சட்ட உதவிகளை வழங்குதல்
  • தவறான உறவுகளை விட்டு வெளியேற முயற்சிக்கும் பெண்களுக்கு உறுதுணையாக இருந்து, சட்ட ஆலோசனை மற்றும் உதவிகளை கொடுத்தல்
  • பாதிக்கப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச தங்குமிடம் மற்றும் பராமரிப்பை வழங்குதல்
  • பெண்ணியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மலபாரின் மிகப்பெரிய நூலகத்தை நடத்துதல்
  • சிறுவர் சிறுமிகளுக்கு சமத்துவத்தின் முக்கியத்துவத்தை கற்பிக்க இளம் பருவ பட்டறைகளை நடத்துதல்
  • பெண்ணிய அரசியல் நோக்கில் பெண்கள் எழுத, படிக்க, பிரசுரிக்க சங்கமித்ரா என்ற பெயரில் இதழை நடத்துதல்

போன்ற பல்வேறு பெண்ணிய செயல்பாடுகளை இந்த அமைப்பு முன்னெடுத்து வருகிறது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "அன்வேஷி மகளிர் ஆலோசனை மையம்".
  2. "அன்வேஷி".
  3. "எம்மைப்பற்றி".