கே. அஜிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜிதா
K AJITHA DSC 0210.JPG
பிறப்பு1950
கேரளம், இந்தியா
பணிசமூக செயற்பாட்டாளர்
பெற்றோர்குன்னிக்கல் நாராயணன்
மந்தாகிணி
வலைத்தளம்
Anweshi

அஜிதா (K. Ajitha) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் நக்சலைட்டும், மனித உரிமைப்போராளியும் ஆவார். புல்பள்ளி சிறப்பு காவல் முகாம் தாக்குதலில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டதில் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.[1]

வாழ்க்கை[தொகு]

இவர் ஏப்ரல் 1950இல் கேரளத்தின் கோழிக்கோடில் பிறந்தவர். இவரின் பெற்றோர் மந்தாகினி, குன்னிக்கல் நாராயணன். இருவரும் நக்சலைட் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள். இவர் தன் பள்ளிக் கல்வியை கோழிக்கோட்டில் பயின்று, கல்லூரியில் சேர்ந்தார்.[2]

நக்சல் இயக்கத்தில்[தொகு]

மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அஜிதாவும் கேரள நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதம் ஏந்தினார்.[2] அந்தக் குழுவில் இடம்பெற்ற ஒரே பெண் அவர் மட்டும்தான்.[3]

வயநாடு தாக்குதல்கள்[தொகு]

200ப்xpx

கேரளத்தின் வயநாடு மாவட்டம் புல்பள்ளி கிராமத்தில் இருந்து விவசாயிகளை வெளியேற்ற 1968-ல் அரசு கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தது. நிலத்தைவிட்டு வெளியேற மறுத்து ஏழாயிரம் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை முறியடிக்கக் காவல்துறை களம் இறக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக 22 நவம்பர் 1968, அன்று 300 பேர் கொண்ட நக்சல் கெரில்லாக்கள், குனினிக்கல் நாராயணன் எனபவரின் கீழ், தலசேரி காவல் நிலையத்தை தாக்கினர் ஆனால் இத்தாக்குதல் வெற்றிபெறவில்லை[3]

48 மணிநேரம் கழித்து 24 நவம்பர் 1968 அன்று வர்கீஸ் தலைமையிலான நக்சலைட் குழு, புல்பள்ளி சிறப்பு காவல் முகாமைத் தாக்கியது. இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.[2]

அதன் பின் நடந்த காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் தலைமை வகித்த வர்கீஸ் சுட்டு கொல்லப்பட்டார்.[2] அஜிதா கைது செய்யப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.[4][5] போலீஸ் காவலில் சித்திரவதைக்கும் உள்ளானார். புல்பள்ளித் தாக்குதல் வழக்கில் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அஜிதாவுக்கு 18 வயது. 1977 க்கு பிறகு 8 ஆண்டுகள் தண்டனைக் காலத்தைக் கழித்தபின் 27 வயதில் விடுதலையானர். விடுதலையான பிறகு, முன்னாள் தோழர் யாகூபை மணந்தார்.

சிறையில் இருந்த காலத்தில் கேரளத்தில் பெண்கள் எதிர்கொண்ட சிக்கல்களை, குறிப்பாகப் பாலியல் தொழிலாளிகள் சந்தித்த பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார்.

மீண்டும் பொதுவாழ்க்கை[தொகு]

அதன் பின்னர் பத்து ஆண்டுகள் கழிந்தன. 1988-ல் மும்பையில் நடைபெற்ற மகளிர் இயக்கங்களின் மாநாட்டில் பங்கேற்றது அஜிதாவின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மீண்டும் பொது வாழ்க்கைக்குத் திரும்பினார். மனித உரிமை செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார். கோழிக்கோட்டில் '‘அன்வேஷி பெண்கள் ஆலோசனை மையத்தை’' 1993 இல் தொடங்கினார்.

இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் கடை நிலையில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கும், பாலியல் சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது இன்றைக்கு அவருடைய செயல்பாடாக உள்ளது

சுயசரிதை[தொகு]

‘'நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்'’ (எதிர் வெளியீடு) என்ற பெயரில் அவரது சுயசரிதை குளச்சல் மு. யூசுபின் மொழியாக்கத்தில் தமிழிலும் வெளியாகி உள்ளது. அவரது நக்சலைட் போராட்டம், சிறை அனுபவங்கள், பிற்காலத்தில் அவரது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணம் போன்றவற்றுக்கான பின்னணிகளை இந்த நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அஜிதா&oldid=3241376" இருந்து மீள்விக்கப்பட்டது