அன்னே பிரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னே பிரைட் (Anne Pride) (ஜூலை 29, 1942 – ஏப்ரல் 24, 1990) பெண்களுக்கான தேசிய அமைப்பின் ஆர்வலர் மற்றும் வெளியீட்டாளர் ஆவார். இவர், வன்கலவிக்கு எதிரான ஆர்வலராக அறியப்படுகிறார். பிரைட், 1977 இல் " டேக் பேக் தி நைட் " என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினார். மேலும், இவர், முதன்முறையாக வன்கலவி நெருக்கடி மையங்களை ஏற்படுத்தினார். இந்த மையங்கள் தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் ஈடுபட்டது.

தொழில்[தொகு]

அன்னே பிரைட், 1968 இல் பெண்ணிய செயல்பாட்டில் ஈடுபடத் தொடங்கினார். [1] இவர் 1969 இல் தேசிய பெண்கள் அமைப்பில் சேர்ந்தார் [2] இவர் 1970 முதல் 1976 வரை இந்த அமைப்பின் தேசிய செய்திமடலான 'டு இட் நெள' இன் ஆசிரியராக பணியாற்றினார். 1975 முதல் 1977 வரை, இவர் இந்த இதழின் இயக்குநர்கள் குழுவில் இருந்தார். [3]

இந்த அமைப்பின் செயற்பாட்டாளராக, 1977 இல் பிட்ஸ்பர்க்கில் வன்முறைக்கு எதிரான பேரணியில் இவர் படித்த நினைவுச் சின்னத்தில் " டேக் பேக் தி நைட் " என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். [4] [5]

பிரைட், கே.என்.ஒ.டபிள்யு,இன்க் நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். இது பெண்ணியக் கண்ணோட்டங்களை வெளியிட வேலை செய்தது. 1977 ஆம் ஆண்டில், பிரைட் பத்திரிகை சுதந்திரத்திற்கான மகளிர் நிறுவனத்தின் கூட்டாளியாக ஆனார். [6]

இவர், 1974 இல் பிட்ஸ்பர்க் ஆக்‌ஷன் அகென்ஸ்ட் ரேப் என்ற உலகின் முதல் கற்பழிப்பு நெருக்கடி மையங்களில் ஒன்றை உருவாக்க உதவினார். பின்னர் 1976 இல் தொடங்கி அந்த நிறுவன ஊழியர்களின் ஒரு பகுதியாக ஆனார். [3]

1980 களில், இந்த மையத்தின் இயக்குநராக இருந்தார். [7] 1980 ஆம் ஆண்டில், ஒரு கற்பழிப்பு விசாரணையின் போது, பாதுகாப்பு வழக்கறிஞருக்கு ரகசியத்தன்மையைக் காரணம் காட்டி, வாடிக்கையாளர் நேர்காணல் குறிப்புகளை வழங்க பிரைட் மறுத்துவிட்டார், [7] அதனால், இவர் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கண்டறியப்பட்டது. மேலும், இந்த வழக்கின் மேல்முறையீடு பென்சில்வேனியா உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. [7] நீதிமன்ற வழக்கு பென்சில்வேனியாவில் சட்டத்தை உருவாக்க வழிவகுத்தது, இது கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நெருக்கடி மையங்களில் உள்ள ஆலோசகர்களுக்கும் ரகசியத்தன்மையை உறுதி செய்யும். [8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிரைட் 1942 இல் அன்னே ஹகெட்டாக பிறந்தார் இவர் 16 வயதில் எட்வின் குர்ல்ஃபிங்கை மணந்தார், ஆனால், இவரது கணவர் பிரிந்து சென்றதும், விவாகரத்துக்கு முன்பே, தனது பெயரை மீண்டும் ஹகெட் என்று தனது குடும்பப் பெயராக மாற்ற விரும்பினார். இருப்பினும், அன்னே பிரைட்டின் தந்தை தனது பெயரை பெண்கள் இயக்கத்துடன் இணைக்க விரும்பவில்லை. அதனால், 1977 இல் எட்வினிடமிருந்து பிரிந்த பிறகு, இவர் தனது பெயரை பிரைட் என்று மாற்றிக்கொண்டார். [9] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

பிரைட் 1989 இல் கருப்பை புற்றுநோயால் கண்டறியப்பட்டார் இவர் ஏப்ரல் 24, 1990 அன்று வெஸ்ட் பென் மருத்துவமனையில் புற்றுநோயுடன் போராடி இறந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. Butler, Ann (19 December 1989). "A look at 3 district feminists who made a difference". The Pittsburgh Press. https://news.google.com/newspapers?nid=1144&dat=19891219&id=noMcAAAAIBAJ&sjid=pmMEAAAAIBAJ&pg=5918,2399878. 
  2. Lowry, Patricia (1984-05-15). "Feminism Transforms Her from Housewife to Activist". The Pittsburgh Press. https://www.newspapers.com/clip/54457919/the-pittsburgh-press/.  and "Former Homemaker Turns Activist". The Pittsburgh Press. 1984-05-15. https://www.newspapers.com/clip/54458187/the-pittsburgh-press/. 
  3. 3.0 3.1 "Pioneer in Women's Movement Anne Pride". The Pittsburgh Press. 26 April 1990. https://news.google.com/newspapers?nid=1144&dat=19900426&id=exwhAAAAIBAJ&sjid=s2MEAAAAIBAJ&pg=6775,5787332. 
  4. "Take Back the Night". UMBC. Archived from the original on 2006-08-30. பார்க்கப்பட்ட நாள் 2013-08-05.
  5. The Feminist Revolution: The Struggle for Women's Liberation. Smithsonian Institution. https://books.google.com/books?id=udZLDwAAQBAJ&dq=%22anne+pride%22+feminist&pg=PA96. 
  6. "Associates | The Women's Institute for Freedom of the Press". www.wifp.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-06-21.
  7. 7.0 7.1 7.2 "Decision Hindering Rape Counseling". The Times-Tribune: pp. 2. 1981-01-24. https://www.newspapers.com/clip/54456477/the-times-tribune/. 
  8. "A look at 3 district feminists who made a difference". The Pittsburgh Press. 19 December 1989. https://news.google.com/newspapers?nid=1144&dat=19891219&id=noMcAAAAIBAJ&sjid=pmMEAAAAIBAJ&pg=5918,2399878. Butler, Ann (19 December 1989). "A look at 3 district feminists who made a difference". The Pittsburgh Press. Retrieved 30 June 2020.
  9. "Take Back the Night". UMBC. Archived from the original on 2006-08-30. பார்க்கப்பட்ட நாள் 2013-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னே_பிரைட்&oldid=3892848" இலிருந்து மீள்விக்கப்பட்டது