அன்னகோடேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னகோடேசுவரர் கோயில் (Annakotesvara Temple) அல்லது அன்னகோடீசுவர சிவன் கோயில் இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்தின் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள கோண்டியா தாலுகாவில் உள்ள லடடேய்பூரில் அமைந்துள்ளது. [1] [2] இக்கோயில் சிவபெருமானுக்கு ஒரே கல்லினால் ஆன சிவலிங்கத்துடன் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [3]

அன்னகோடேஸ்வரர் கோவில், லடடேய்பூர், தேன்கனல்

கட்டிடக்கலை[தொகு]

இந்த கோயில், ரேகா தேயுலா ( விமானம் ) மற்றும் பிதா தேயுலா ஆகியவற்றைக் கொண்ட பஞ்சரதக் கோயிலாகும். கோயில் பிரதான விமானத்துடன் காகரமுண்டி மற்றும் பிதாமுண்டிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு, பல சிதைந்த சிற்பங்கள் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் அடிப்படையில் இந்தக் கோயில் 16ஆம் நூற்றாண்டில் சூரியவம்சி கஜபதி ஆட்சியின் போது கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. கர்ப்பகிரகம் ஒரு வட்ட யோனிபீடத்தை மட்டுமே கொண்டுள்ளது. முர்ஷிதாபாத் அருகே வங்காள நவாப்களிடமிருந்து வந்த முஸ்லீம் படையெடுப்பாளரான கலாபஹாட்டின் தாக்குதல்களால் லிங்கமூர்த்தி இடம்பெயர்ந்தார் என அறியப்படுகிறது.

மேலும், இந்த கோயில் இந்திய தொல்லியல் துறையின் நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annakotisvara Siva Temple - Latadeipur - Dhenkanal". Indira Gandhi National Centre for the Arts. பார்க்கப்பட்ட நாள் 5 June 2015.
  2. "Destinations: Dhenkanal". பார்க்கப்பட்ட நாள் 5 June 2015.
  3. "Temples (of Dhenkanal): Saiva Temples". Government of Odisha. பார்க்கப்பட்ட நாள் 5 June 2015.
  4. "Alphabetical List of Monuments - Orissa". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னகோடேசுவரர்_கோயில்&oldid=3844851" இலிருந்து மீள்விக்கப்பட்டது