உள்ளடக்கத்துக்குச் செல்

அன்சுயாபாய் போர்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்சுயாபாய் பாவ்ராவ் போர்கர் (Ansuyabai Borkar) என்பவர் சமூக ஆர்வலர் மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் 1955 முதல் 1957 வரை இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில், முதலாவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அன்சுயாபாய் மத்திய பிரதேசத்தின் காம்ப்டியில் (அப்போது மத்திய மாகாணங்கள் மற்றும் பெராரின் ஒரு பகுதி) 1929ஆம் ஆண்டு விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.[1] ராய்ப்பூரின் சேலம் பெண்கள் இந்தி ஆங்கில நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.[2]

தொழில்

[தொகு]

போர்க்கர் ஒரு தீவிர சமூக சேவகர் மற்றும் நாக்பூரில் வயது வந்த பெண்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியவர் ஆவார்.[1] இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் நாக்பூர் மாவட்டக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.[2]

நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினராக இருந்த, இவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு, போர்கர் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட பண்டாரா (பட்டியலினத்தவருக்கான தொகுதி, மத்தியப் பிரதேசம்) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 84,458 வாக்குகளையும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு வேட்பாளர் சுமார் 58,000 வாக்குகளையும் பெற்றார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1947-ல், இவர் இதேகா அரசியல்வாதி பௌராவ் போர்க்கரை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.[2] பௌராவ் பண்டாராவின் உறுப்பினராக இருந்தார். பிப்ரவரி 2, 1955 அன்று பதவியிலிருந்தபோது பௌராவ் இறந்தார்.[4]

போர்க்கர் 18 சூலை 2000 அன்று மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் இறந்தார் [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Lok Sabha Synopsis of Debates: Obituary References". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  2. 2.0 2.1 2.2 "Members Bioprofile: Borkar, Shrimati Ansuyabai". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  3. "Election Results of Bye-elections, 1952-1995" (XLS). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  4. Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சுயாபாய்_போர்கர்&oldid=3743831" இலிருந்து மீள்விக்கப்பட்டது