உள்ளடக்கத்துக்குச் செல்

அனைத்திந்திய கைவினைப் பொருட்கள் வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்திந்திய கைவினைப் பொருட்கள் வாரியம்
All India Handicrafts Board
சுருக்கம்அ.இ.கை.பொ.வா
உருவாக்கம்1952
நிறுவனர்பபுல் செயகர்
கலைக்கப்பட்டது2020

அனைத்திந்திய கைவினைப் பொருட்கள் வாரியம் (All India Handicrafts Board) இந்தியாவில் 1952 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும், இது கைவினைப்பொருட்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் நெசவு அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். வாரியத்தின் ஆரம்பகால முக்கிய நபர்களில் புபுல் செயகர், கமலாதேவி சட்டோபாத்யாய், லட்சுமி சந்த் செயின் மற்றும் ஃபோரி நேரு ஆகியோர் அடங்குவர். கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் ஒழிக்கப்பட்டது.

தோற்றம்

[தொகு]

1950 ஆம் ஆண்டில் பூபுல் செயகர் சவகர்லால் நேருவால் பொருளாதாரத்தின் கைத்தறித் துறையை ஆய்வு செய்ய அழைக்கப்பட்டார். [1] இதன் விளைவாக 1952 ஆம் ஆண்டில் அனைத்திந்திய கைவினைப் பொருட்கள் வாரியம் நிறுவப்பட்டது. [2] [3] [4] இதன் முதல் தலைவர் கமலாதேவி சட்டோபாத்யாய் ஆவார். [5] லட்சுமி சந்த் ஜெயின், கிட்டி சிவ ராவ் மற்றும் ஃபோரி நேரு ஆகியோர் ஆரம்பகால முக்கிய நபர்களில் அடங்குவர். [2] [6]

நோக்கம்

[தொகு]

அனைத்திந்திய கைவினைப் பொருட்கள் வாரியம் கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் நெசவு அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, மேலும் இது மத்திய குடிசைத் தொழில்கள் பல்பொருள் அங்காடி உட்பட இந்தியா முழுவதும் உள்ள சந்தைப்படுத்தல் இடங்களை உள்ளடக்கிய ஒரு குடை அமைப்பாகும். [7]

செயலிழக்கச் செய்தல்

[தொகு]

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இவ்வாரியத்தை மூடியது. [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Davis, Richard H. (2008). What's the Use of Art?: Asian Visual and Material Culture in Context.
  2. 2.0 2.1 Salvi, Gouri (1999). Development Retold: Voices from the Field.
  3. Gupta, Anu; Mehta, Shalina (1 January 2016). "The Effect of Colonization and Globalization in the shaping of Phulkari: A case study of the Textiles of Punjab, India". Textile Society of America Symposium Proceedings. https://digitalcommons.unl.edu/tsaconf/990/. 
  4. Edwards, Eiluned (2020). A Companion to Textile Culture.
  5. Mozumdar, Sreya (2020). State of India's Livelihoods (PDF).
  6. McGowan, Abigail (4 March 2021). "Mothers and Godmothers of Crafts: Female Leadership and the Imagination of India as a Crafts Nation, 1947–67". South Asia: Journal of South Asian Studies 44 (2): 282–297. doi:10.1080/00856401.2021.1876589. பன்னாட்டுத் தர தொடர் எண்:0085-6401. https://www.tandfonline.com/doi/full/10.1080/00856401.2021.1876589. 
  7. Littrell, Mary A.; Dickson, Marsha A. (2012). "1. Artisan Enterprise, Fair Trade, and Business Social Responsibility and Accountability". Artisans and Fair Trade: Crafting Development (in ஆங்கிலம்). Sterling, VA: Kumarian Press. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56549-321-6.
  8. Nath, Damini (6 August 2020). "Abolition of handicrafts board a 'worrying' move, says NGO" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/abolition-of-handicrafts-board-a-worrying-move-says-ngo/article32281124.ece. 

மேலும் படிக்க

[தொகு]