உள்ளடக்கத்துக்குச் செல்

அனு அகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனு அகா

அனு அகா (Anu Aga பிறப்பு 3 ஆகஸ்ட் 1942) ஓர் இந்திய லட்சாதிபதி, தொழிலதிபர் மற்றும் சமூக சேவகர் ஆவார், இவர் 1996 முதல் 2004 வரை தெர்மாக்சின் எனும் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.[1][2] போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட எட்டு பணக்கார இந்திய பெண்கள் மத்தியில் இடம் பெற்றார். 2007 ஆம் ஆண்டில் நிகர மதிப்பு அடிப்படையில் 40 பணக்கார இந்தியர்கள் பட்ட்டியலிலும் இவர் இடம் பெற்றார்.[3][4] ஆண்டின் சிறந்த பெண் சாதனையாளர் எனும் விருதினைப் பெற்றார். இந்த விருதினை அசோசமின் பெண்கள் பிரிவு இவருக்கு வழங்கியது.[5]

தெர்மாக்ஸ் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் சமூக செயற்பாட்டாளராக செயல்பட்டார்.2010 ஆம் ஆண்டில் இந்திய அரசின் குடிமை விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. இவர் தற்போது டீச் ஃபார் இந்தியா நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.[6] குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலால் 26 ஏப்ரல் 2012 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார்.[7]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

அனு ஆகா 3 ஆகஸ்ட் [8] 1942 இல் பம்பாயில் ஒரு பார்சி ஜோராஸ்ட்ரியன் குடும்பத்தில் பிறந்தார். இவர் பொருளாதாரத்தில் மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார் [9] மும்பையயில் உள்ள டாடா சமூக அறிவியல்கள் நிறுவனத்தில் உளநோய் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர்அமெரிக்காவில் நான்கு மாதங்கள் படித்தார்.

தொழில்[தொகு]

1985 இல் தெர்மாக்ஸில் தனதுதொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அனு, பின்னர் 1991 முதல் 1996 வரை அதன் மனித வளப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். கணவர் ரோஹிண்டன் ஆகாவின் மரணத்திற்குப் பிறகு, இவர் தெர்மாக்ஸின் தலைவராக பொறுப்பேற்றார், 2004 இல் ஓய்வு பெற்றார் . அதன் பின்னர் இவரது மகள் மற்றும் நிறுவனத்தின் துணைத் தலைவர் மெஹர் புடும்ஜீ அந்தப் பதவிக்குத் தேர்வானர். அனு பின்னர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக இருந்தார்,[3] மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் பின்வரும் குழுக்களில் பணியாற்றினார்

2012 மே மாதம் முதல் 2014 ஆம் ஆண்டில் மே மாதம் வரையிலான காலங்களிலும் பின்னர் 2014 செப்டம்பர் முதல் தற்போது வரை உறுப்பினர், பணியாளர், பொது குறைகள், சட்டம் மற்றும் நீதி பற்றிய குழுக்களில் பணியாற்றி வருகிறார் குழந்தைகள் மீதான நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக ஆகஸ்டு 2012 முதல் மே 2014 வரை பணியாற்றியுள்ளார். உறுப்பினர், பெண்கள் அதிகாரமளித்தல் குழுவில் செப்டம்பர் 2012 முதல் செப்டம்பர் 2013 வாரி பணியாற்றியுள்ளார். உறுப்பினர், வணிகக் குழு உறுப்பினராக ஆகஸ்டு 2012 முதல் டிசம்பர் 2012 வரை பணியாற்றியுள்ளார்.

விருதுகள்[தொகு]

மும்பை பெண்கள் தசாப்த சாதனையாளர்கள் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருதினைப் பெற்றுள்ளார். மேலும், ராஜ்யசா உறுப்பினராக இவர் பதவி வகுத்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அனு, ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற பட்டதாரியான ரோஹிண்டன் அகாவை மணந்தார் .இந்தத் தம்பதிக்கு மெகர் எனும் மகளும், குருஷ் எனும் மகளும் உள்ளனர். ரோகிண்டன் 1996 இல் பக்கவாதம் ஏற்பட்டதனால் இறந்தார், ஒரு வருடம் கழித்து, இவரது மகன் குருஷ் தனது 25 ஆம் வயதில் இறந்தார். இன்று, அர்னாவாசு 'அனு' அகா மகாராட்டிராவின் புனேவில் வசிக்கிறார்.

அனு அகாவின் மகளான, மெகர் புடும்ஜி தெர்மாக்சு நிறுவனத்தின் தற்போதைய தலைவராக உள்ளார், 2004 ஆம் ஆண்டில் இவரது தாயிடமிருந்து பொறுப்பேற்றார். லண்டனில் உள்ள இம்பீரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் இரசாயன பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் செப்டம்பர் 1990 இல் தெர்மாக்சு நிறுவனத்தில் சேர்ந்தார், மேலும் இந்திய தொழில்துறையின் (சிஐஐ) குடும்ப வணிக மன்றம் மற்றும் இளம் இந்தியர்களின் கூட்டமைப்பில் மெகர் புடும்ஜி உறுப்பினராக உள்ளார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anu Aga". Forbes. 6 March 2018. https://www.forbes.com/profile/anu-aga. 
  2. "Anu Aga passes Thermax baton to new chairperson". இந்தியன் எக்சுபிரசு. 5 October 2004. http://www.indianexpress.com/oldStory/56382/. 
  3. 3.0 3.1 "India's Richest". Forbes. 14 November 2007. p. 2.
  4. "Anu Aga and triumph of the spirit". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 February 2004. http://timesofindia.indiatimes.com/city/Anu-Aga-and-triumph-of-the-spirit/articleshow/484592.cms. 
  5. "Women of the Decade" இம் மூலத்தில் இருந்து 2014-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140219114553/http://www.afternoondc.in/city-news/women-of-the-decade/article_99847. 
  6. "Archived copy". Archived from the original on 11 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "Nominated (Rajya Sabha) - Statement as on 03/02/2014". Govt. of India. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
  8. "On Anu Aga's Birthday, a Message From Her Close Friend Rahul Bajaj". The Quint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-03.
  9. "St Xavier's past, present, future..." இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811031713/http://articles.timesofindia.indiatimes.com/2010-01-05/bollywood/28139734_1_memory-lane-alma-mater-alumni. 
  10. Bhosale, Jayashree. "Meher Pudumjee is the new Chairperson for CII-Pune". The Economic Times.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனு_அகா&oldid=3945643" இலிருந்து மீள்விக்கப்பட்டது