இந்தியாவுக்கு கற்றுக்கொடுங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியாவுக்குக் கற்றுக்கொடுங்கள்
TFI logo primary black.png
உருவாக்கம்2007
வகைகல்வி, இலாப நோக்கற்ற அமைப்பு
நோக்கம்இந்தியாவில் கல்வி ஏற்றத்தாழ்வை நீக்குதல்
அமைவிடம்
சேவைப் பகுதிமும்பை, புனே, புது தில்லி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் ஐதராபாத்
முக்கிய நபர்கள்
சாகீன் மிஸ்த்ரி - நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
வலைத்தளம்www.teachforindia.org

இந்தியாவுக்குக் கற்றுக்கொடுங்கள் (Teach For India) என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது டீச் ஃபார் ஆல் என்ற வலைப்பின்னலின் ஒரு பகுதியாகும். [1] குறைந்த வருமானம் கொண்ட பள்ளிகளில் கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் நிபுணர்களை இண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஆசிரியர்களாக பணியாற்ற இந்த நிறுவனம் நியமிக்கிறது. [2] இந்தியாவில் கல்வி ஏற்றத்தாழ்வு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்க இந்த அமைப்பு செயபட்டு வருகிறது. [3] [4] [5]

அமைப்பு[தொகு]

305 பள்ளிகளில் இந்தியாவுக்குக் கற்றுக்கொடுங்கள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. மும்பை, புனே, புது தில்லி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இந்தியாவின் ஏழு நகரங்களில் சுமார் 38000 மாணவர்கள் பலன் அடையும் வகையில் இது செயல்பட்டுவருகிறது. [6] இந்தியாவுக்குக் கற்றுக்கொடுங்கள் என்ற அமைப்பு என்ற இந்த அமைப்பு 2008இல் தொடங்கப்பட்டது. சாகீன் மிஸ்திரி என்பவர், திறமையான ஆசிரியர்களை இம்முறைக்கு உட்படுத்துவதன் மூலம் இந்திய கல்வித் துறையில் முறையான மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினார். [7] [8] இந்த குழு அமெரிக்காவுக்குக் கற்றுக்கொடுங்கள் என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியும், அதன் நிறுவனருமான வெண்டி கோப் என்பவரைச் சந்தித்தும், மெக்கின்சி ஆய்வினை கருத்தில் கொண்டும், இந்தியாவில் மாற்றத்திற்கான கோட்பாட்டை கற்பிக்கத் தொடங்கியது.

குறிப்புகள்[தொகு]