அனில் அண்ணா கோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனில் அண்ணா கோட்
Member of the சட்டப்பேரவை உறுப்பினர் சட்டமன்றம்
for துலே நகரம்
பதவியில்
2009–2019
முன்னையவர்இராச்யவர்தன் கதம்பந்த்
பின்னவர்சா பரூக் அன்வர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 மே 1947 (1947-05-24) (அகவை 76)
துலே, பாம்பாய் மாகாணம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
துணைவர்ஹேமா
பிள்ளைகள்தேஜா கோட்
வாழிடம்(s)பாம்போ காலி, துலே
வேலைஅரசியல்வாதி

அனில் கோட் (Anil Anna Gote) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். துலே நகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். போலி முத்திரைக் குற்றச்சாட்டின் பேரில் இவர் நான்கு ஆண்டுகள் சிறையில் கழித்தார். ஆனால் இவர் ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை.

அரசியல் வாழ்க்கை[தொகு]

முன்னாள் பத்திரிகையாளரான கோட், 1999ல் சமாஜ்வாடி ஜனதா கட்சி வேட்பாளராக சட்டமன்றத்தில் நுழைந்தார். மேலும் காங்கிரசு கட்சியை பிளவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், அன்றைய அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும் முயன்றார்.[1] இவர் 2009 இல் துலே தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 2014 இல் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

30 மார்ச் 2017 அன்று, மகாராட்டிரா சட்ட மேலவைக்கு அரசியலமைப்பு உரிமைகள் இல்லை என்ற அடிப்படையில் கோட் குரல் கொடுத்தார்.[3] கோட்டின் கருத்துக்காக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதன் பிறகு, இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் ஒரு அங்கமாக மாறினார்.

போலி முத்திரைக் குற்றச்சாட்டு[தொகு]

போலி முத்திரைகள் மற்றும் முத்திரைத் தாள்களை அச்சடித்து விற்பனை செய்ததற்காக அப்துல் கரீம் தெலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றம் தொடர்பாக, கோட் ஜூலை 2003 இல் கைது செய்யப்பட்டு புனேவில் உள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.[4][5] இவர் ஜூன் 2007 இல் ரூ. 10 லட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவருடன் குற்றம் சாட்டப்பட்ட சூர்யவன்சி ரூ. 50,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.[6] பம்பாய் உயர் நீதிமன்றம் 2011 இல் இவரது விடுதலைக்கான விண்ணப்பத்தை நிராகரித்தது.[5] ஆனால் அக்டோபர் 2014 இல் இவர் குற்றச்சாட்டில் தண்டிக்கப்படவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Shaikh, Zeeshan (9 October 2014). "Dhule: BJP banks on journalist who was accused in Telgi scam". The Indian Express. http://indianexpress.com/article/cities/mumbai/dhule-bjp-banks-on-journalist-who-was-accused-in-telgi-scam/. 
  2. "Dhule City (Maharashtra) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
  3. "Row after MLA seeks to disband council | Mumbai News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  4. "Gote wants Bhujbal charged". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 February 2004 இம் மூலத்தில் இருந்து 1 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120701151139/http://articles.timesofindia.indiatimes.com/2004-02-12/india/28348830_1_samajwadi-janata-party-mla-anil-gote-magisterial-custody. 
  5. 5.0 5.1 "MLA Gote's discharge plea rejected". Times of India. 5 February 2011. http://timesofindia.indiatimes.com/city/mumbai/MLA-Gotes-discharge-plea-rejected/articleshow/7428220.cms. 
  6. "Former MLA Anil Gote gets bail in Telgi Stamp Scam case". Oneindia. 30 June 2007. http://news.oneindia.in/2007/06/30/former-mla-anil-gote-gets-bail-in-telgi-stamp-scam-case-1183217974.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_அண்ணா_கோட்&oldid=3854401" இலிருந்து மீள்விக்கப்பட்டது