அனன்யா பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனன்யா பாண்டே
2019இல் அனன்யா பாண்டே
பிறப்பு30 அக்டோபர் 1998 (1998-10-30) (அகவை 24)
குடியுரிமைஇந்தியன்
பணிநடிகை

அனன்யா பாண்டே (Ananya Panday) (பிறப்பு 30 அக்டோபர் 1998) இந்தித்திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். நடிகர் சங்கி பாண்டேயின் மகளான, இவர் 2019 ஆம் ஆண்டில் வெளியான காதல் திரைப்படமான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 மற்றும் நகைச்சுவைப் படமான பதி பத்னி அவுர் வோ ஆகியவற்றில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்திற்காக, இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், 30 அக்டோபர் 1998 இல் நடிகர் சங்கி பாண்டேவுக்கு மகளாகப் பிறந்தார். இவர் 2017 இல் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பட்டம் பெற்றார். [1] இவர், 2017 இல் பாரிஸில் நடந்த வேனிட்டி ஃபேரின் லு பால் டெஸ் டெபுடான்டெஸ் என்ற நிகழ்வில் பங்கேற்றார் [2] [3]

நடிப்பு வாழ்க்கை[தொகு]

தர்மா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் டைகர் செராப் மற்றும் தாரா சுதாரியா ஆகியோருடன் இணைந்து நடித்த காதல் படமான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 மூலம் 2019 ஆம் ஆண்டில் இவர் தனது நடிப்பில் அறிமுகமானார். [4] [5] இந்த படம் திரையரங்க வசூலில் சிறப்பாக செயல்பட்டது. [6] இவர் அடுத்ததாக பதி பத்னி அவுர் வோ(2019) என்றப் படத்தில் நடித்தார். கார்த்திக் ஆரியன் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோரின் நடிப்பில் 1978 ஆம் ஆண்டில் இதே பெயரில் வெளியான படத்தின் மறு ஆக்கமாகும் .

பாண்டே அடுத்ததாக இஷான் கத்தாருடன் இணைந்து நடித்த காலி பீலி என்ற அதிரடிப் படத்திலும், ஷாகுன் பாத்ராவின் இன்னும் பெயரிடப்படாத காதல் நாடகத்திலும், தீபிகா படுகோனே மற்றும் சித்தாந்த் சதுர்வேதி ஆகியோருடன் நடிக்கிறார். பூரி ஜெகன்நாத்தின் இன்னும் பெயரிடப்படாத பன்மொழி படத்திற்காக விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடிக்க இருக்கிறார். [7]

மற்றப் பணிகள்[தொகு]

2019 இல் அனன்யா

சமூக ஊடக கொடுமைப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், எதிர்மறையைத் தடுப்பதற்கும், நேர்மறையான சமூகத்தை உருவாக்குவதற்கும் 2019 ஆம் ஆண்டில் இவர் சோ பாசிட்டிவ் என்ற முயற்சியைத் தொடங்கினார். [8] 2019 எகனாமிக் டைம்ஸ் விருதுகளில், இந்த திட்டத்திற்கான ஆண்டின் முன்முயற்சி என்று பெயரிடப்பட்டது. [9]

குறிப்புகள்[தொகு]

  1. "Who is Ananya Panday?'". 11 April 2018. https://indianexpress.com/article/entertainment/bollywood/ananya-panday-student-of-the-year-2-5132985/. 
  2. "Must-see! Chunky Panday's gorgeous daughter at Le Bal". https://www.rediff.com/getahead/report/glamour-chunky-and-ananya-pandays-adorable-le-bal-pix/20180116.htm. 
  3. "Ananya Panday steals the show in a Jean Paul Gaultier gown at le Bal in Paris" (in en-IN). 28 November 2017. https://indianexpress.com/article/lifestyle/fashion/chunky-pandays-daughter-ananya-in-jean-paul-gaultier-gown-at-le-bal-in-paris-4958294/. 
  4. "Pictures that prove Chunky Panday's daughter Ananya Panday is Bollywood ready". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/photo-features/pictures-that-prove-chunky-pandays-daughter-ananya-panday-is-bollywood-ready/ananya-panday-snapped-looking-fresh-as-a-daisy-at-the-airport/photostory/63626199.cms. 
  5. Ramnath, Nandini (10 May 2019). "'Student of the Year 2' movie review: All games and no fun". https://scroll.in/reel/922946/student-of-the-year-2-movie-review-all-games-and-no-fun. 
  6. "Student Of The Year 2 Drops In Week Two". 24 May 2019. https://boxofficeindia.com/report-details.php?articleid=5039. 
  7. Raghuvanshi, Aakansha (20 February 2020). "Ananya Panday Is "Happy And Excited" To Join Vijay Deverakonda In His Bollywood Debut". https://www.ndtv.com/entertainment/ananya-panday-is-happy-and-excited-to-join-vijay-deverakonda-in-his-bollywood-debut-2182970. 
  8. "Ananya Panday launches 'So Positive', an initiative against cyberbullying, on World Social Media Day". Firstpost. 30 June 2019. https://www.firstpost.com/entertainment/ananya-panday-launches-so-positive-an-initiative-against-cyberbullying-on-world-social-media-day-6907091.html. 
  9. "Ananya Pandays initiative So Positive wins Initiative of the Year". தி எகனாமிக் டைம்ஸ். 24 December 2019. https://economictimes.indiatimes.com/industry/csr/initiatives/ananya-pandays-initiative-so-positive-wins-initiative-of-the-year/articleshow/72951431.cms?from=mdr. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனன்யா_பாண்டே&oldid=3741402" இருந்து மீள்விக்கப்பட்டது