அனந்தபாரதி ஐயங்கார்
Appearance
அனந்தபாரதி ஐயங்கார் (1786-1864) என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவராவார். இவர் தஞ்சை அரண்மனையில் வித்வானாக இருந்தவர். இவர் வைணவராக இருந்தபோதும் திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பது இவரது நூல்களின் வழியாக அறியமுடிகிறது.[1] இவர் தன் சிறு வயதிலேயே தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், துளு, மோடி ஆகிய மொழிகளில் தேர்ச்சிப்பெற்றதாக தான் இயற்றிய திருவிடைமருதூர் நொண்டி நாடகம் நூலில் குறிப்பிடுகிறார்.[2]
இவர் உத்தர ராமாயணக்கீர்தனை, பாகவத தசமஸ்கந்த நாடகம், தேசிகர் பிரபந்தம், மருதூர் வெண்பா, யானைமேலழகர் நொண்டிச்சிந்து, திருவிடைமருதூர் நொண்டி நாடகம், முப்பாற்றிரட்டு முதலிய இசை நாடகத் தொடர்பான நூல்களை இயற்றியுள்ளார்.[3]