அனட்டா சோனி
அனட்டா சோனி (Anatta Sonney) ஒரு இந்திய அறிவியலாளர் ஆவார். [1] இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது. [2] இந்த விருதை இவருக்கு 2016ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, பெங்களூரிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த இரண்டு பெண் விஞ்ஞானிகளான, சுபா வாரியர், பி. கோதைநாயகி ஆகியோருடன் வழங்கினார். [3]
சோனி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) சந்திரயான்-1, மங்கல்யான் திட்டம், ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை ஏவுவது உள்ளிட்ட பல வரலாற்று விண்வெளி பயணங்களில் பணியாற்றியுள்ளார். [4] [5] இவர் செயற்கைக்கோள்களுக்கான சுற்றுப்பாதை நிர்ணயிக்கும் முறையை வடிவமைத்து அபிவிருத்தி செய்தார். மேலும், பயணங்களை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த உதவினார். [6] செவ்வாய் ஆர்பிட்டர் திட்டத்துக்கு பங்களித்ததற்காக இவருக்கு, "சந்திரயான் -1 பேலோட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், சயின்ஸ் டேட்டா சென்டர் மற்றும் மிஷன் ஆபரேஷன்ஸ்" விருது வழங்கப்பட்டது. [7] [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Anatta Sonney". Researchgate. பார்க்கப்பட்ட நாள் January 19, 2021.
- ↑ "Nari Shakti Awardees - Ms. Anatta Sonney, Karnataka | Ministry of Women & Child Development". wcd.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
- ↑ Service, Tribune News. "Prez honours 31 with Nari Shakti Puraskar on Women's Day". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
- ↑ "No place for gender biases in modern India: President". PTI News. பார்க்கப்பட்ட நாள் January 19, 2021.
- ↑ Vighnesam, N. V.; Sonney, Anatta; Subramanian, B. (2020-08-01). "IRS Orbit Determination Accuracy Improvement". Journal of the Astronautical Sciences 50: 355–366. doi:10.1007/BF03546258. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9142. http://adsabs.harvard.edu/abs/2020JAnSc..50..355V.
- ↑ "Nari Shakti Puraskar for three from state". Deccan Herald (in ஆங்கிலம்). 2017-03-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
- ↑ "3 Isro women scientists, NGO get Nari Shakti Award". Deccan Herald (in ஆங்கிலம்). 2017-03-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
- ↑ Manglik, Reshu (2018-03-07). "Women's Day Special: Let's have a look at these women heroes who won Nari Shakti Puraskar last year". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.