அனசுயா சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனசுயா சங்கர்
புனைப்பெயர் திரிவேணி
தொழில் புதின ஆசிரியர்
நாடு இந்தியர்
எழுதிய காலம் 1953–1963
துணைவர்(கள்) எஸ். என். சங்கர்
பிள்ளைகள் 1
உறவினர்(கள்) ஆர்யாம்பா பட்டாபி (சகோதரி)
பி. எம். சிறீகாந்தையா (மாமா)
வாணி (உறவினர்)

திரிவேணி என்ற தனது புனைப்பெயரால் பிரபலமாக அறியப்பட்ட அனசுயா சங்கர் (Anasuya Shankar) (1 செப்டம்பர் 1928 - 29 சூலை 1963), கன்னட மொழியில் நவீனப் புனைகதைகளை எழுதிய இந்திய எழுத்தாளர் ஆவார். இவரது பல புதினங்கள் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, பெல்லி மோடா (1967) மற்றும் ஷரபஞ்சாரா (1971) - இவை இரண்டும் நடிகை கல்பனா நடித்து புட்டண்ணா கனகல் இயக்கியுள்ளார். இவரது சிறிய கதைகள் தொகுப்பு சமஸ்யய மாகு 1950 இல் தேவராஜா பகதூர் பரிசை வென்றது. இவரது புதினமான அவலா மனே 1960 இல் கர்நாடக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. [1]

வாழ்க்கை[தொகு]

இவர், 1928 செப்டம்பர் 1 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் முந்தைய மைசூர் இராச்சியத்தில் (இன்றைய மைசூர், கர்நாடகா) மைசூரின் சாமராஜபுரம் புறநகரில், பி. எம். கிருஷ்ணசாமி மற்றும் தங்கம்மா ஆகியோருக்கு பிறந்தார். [2] இவர் பாகீரதி என்றும் அழைக்கப்பட்டார். இவருக்கு ஆர்யாம்பா பட்டாபி என்ற ஒரு தங்கை இருந்தார். இவர் ஒரு எழுத்தாளராகவும் இருந்தார். இவரது குடும்பத்தில் இவரது மாமா பி.எம்.ஸ்ரீகாந்தையாவும், உறவினர் வாணியும் எழுத்தாளர்கள் ஆவர் .

மைசூரில் உள்ள மகாராணி கலைக் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற இவருக்கு, 1947 ஆம் ஆண்டில், அரசியல் அறிவியலில் சிறந்து விளங்கியதற்காக சித்தேகவுடா தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. [1] மைசூரில் உள்ள சாரதா விலாச கல்லூரியில் ஆங்கில பேராசிரியரான எஸ்.என்.சங்கரை (1925–2012) 1951 இல் திருமணம் செய்து கொண்டார். [3]

மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவர் திரிவேணி என்ற புனைப் பெயரை ஏற்றுக்கொண்டார். காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது அஸ்தி, கங்கையின் பிற இணை நதிகளான யமுனை ஆறு மற்றும் திரிவேணி சங்கம் என்று அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத சரசுவதி ஆறு ஆகியவற்றின் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. [1] மைசூரில் உள்ள மிஷன் மருத்துவமனையில் மீரா என்ற குழந்தையைப் பெற்றெடுத்த 10 நாட்களுக்குப் பிறகு,சூலை 29, 1963 அன்று இவர் நுரையீரல் அடைப்பு காரணமாக இறந்தார். [3]

தொழில்[தொகு]

திரிவேணி, அபஸ்வரா என்ற தனது முதல் புதினத்தை1953 இல் வெளியிட்டார். அதன் பிறகு, இவர் 20 புதினங்களையும், 3 சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டார். இவரது புதினக்களில் முக்கியமாக பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகள், அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் ஏமாற்றங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கதைகளாக இருந்தன. இவரது 'தவரேய கோலா' என்ற புதினம் சாகித்ய அகாடமி விருதை வென்றது. [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனசுயா_சங்கர்&oldid=3048592" இருந்து மீள்விக்கப்பட்டது