அந்திரோகிலீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்திரோகிலீசுமும் சிங்கமும்
அந்திரோகிலீசு சிங்கத்தின் பாதத்திலிருந்து முள்ளை எடுக்கிறார்.
ஜான் பேட்டனின் 'ஐரோப்பாஸ் ஃபேரி புக் (1916) நூலிலின் விளக்கப்படம்.
நாட்டுப்புறக் கதை
பெயர்: அந்திரோகிலீசுமும் சிங்கமும்
தகவல்
Aarne-Thompson Grouping:ATU 156
பகுதி: கிரேக்கம், உரோம், ஐரோப்பா

அந்திரோகிலீசு (Androcles, கிரேக்கம்: Ἀνδροκλῆς‎ , மாற்றாக லத்தீன் மொழியில் Androclus என்று பலுக்கப்படுகிறது) என்பவர் செவிவழிக் கதையில் சிங்கத்துடன் நட்பு கொண்ட ஒரு மனிதர் ஆவார்.

இந்த கதையானது நாட்டுப்புற கதைகளுக்கான ஆர்னே-தாம்சன் வகைப்பாடு அமைப்பில் வகை 156 என சேர்க்கப்பட்டுள்ளது.[1] பழைய கதையான இது நடுக்காலத்தில் "இடையனும் சிங்கமும்" என்ற பெயரில் மீண்டும் தோன்றியது. பின்னர் ஈசாப்பின் நீதிக்கதைகளிலும் கூறப்பட்டது. இது பெர்ரி பொருளடக்கத்தில் 563 ஆவது கதையாக உள்ளது. மேலும் ஈசாப்பின் சிங்கமும் சுண்டெலியும் கதையுடன் இக்கதையின் பொதுவான அம்சங்கள் ஒத்துள்ளன.

பாரம்பரியக் கதை[தொகு]

இந்த கதையின் பழைய குறிப்பு ஆலஸ் கெல்லியசின் இரண்டாம் நூற்றாண்டின் அட்டிக் நைட்சில் காணப்படுகிறது.[2] அப்பியனின் அழிந்துபோன போன படைப்பான Aegyptiaca /Αἰγυπτιακά (எகிப்தின் அதிசயங்கள்) இல் அப்பியன் சொன்ன ஒரு கதையை ஆசிரியர் அதில் விவரிக்கிறார். அப்பியன் உரோமில் நேரில் கண்டதாகக் கூறிய நிகழ்வுகளாக இது உள்ளது. இந்த பதிப்பில், அந்திரோகிலீசு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியை நிர்வகிக்கும் முன்னாள் உரோமானிய நிர்வாகியின் அடிமை. அவர் ஒரு குகையில் தஞ்சம் அடைகிறார். அது காயமடைந்த ஒரு சிங்கத்தின் குகையாகும். அவர் அதன் பாதத்திலிருந்து அவர் ஒரு பெரிய முள்ளை அகற்றுகிறார். சிங்கம் தன் நன்றியுணர்வுடன் அவனுடன் பழகுகிறது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்திரோகிலீசுக்கு ஊருக்கு செல்லவேண்டும் என்ற ஏக்கம் உருவாகிறது. ஆனால் விரைவில் அவர் தப்பிச்சென்ற அடிமையாக பிடிபட்டு உரோமுக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் சர்க்கஸ் மாக்சிமசில் பேரரசரின் முன்னிலையில் காட்டு விலங்குக்கைக் கொண்டு கொல்லப்படும் தண்டனை அளிக்கப்படுகிறது. குறிப்பில் காணப்படும் பேரரசர் கயஸ் சீசர் என்று குறிப்பிடப்படுகிறார். அதில் உள்ளவர் பேரரசர் காலிகுலா என்று கருதப்படுகிறது.[3] அந்திரோகிலீசை கொல்ல சிங்கம் விடப்படுகிறது. அது அந்திரோகிலீசு மீது பாசத்தைக் காட்டுகிறது. இதைக் கண்டு அவரை விசாரித்த பேரரசர், நட்பின் சக்திக்கு, சாட்சியாக உள்ள இந்த நிகழ்வை அங்கீகரிக்கும் விதமாக பேரரசர் அடிமையை மன்னிக்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் பார்வையாளராக இருந்த அப்பியன் குறிப்பிட்டது;

அதன்பிறகு , அந்திரோகிலீசும், சிங்கமும் தோளோடு தோள் ஒட்டி இருந்ததைக் கண்டோம்; அந்திரோகிலீசுக்கு பணம் கொடுக்கப்பட்டது, சிங்கத்தின் மீது பூக்கள் தூவப்பட்டனத. அவர்களை எங்கு பார்த்தாலும், "இது சிங்கம், ஒரு மனிதனின் நண்பன்; இந்த மனிதர், சிங்கத்தின் மருத்துவர்" என்று கூச்சலிட்டனர்.[4]

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு கிளாடியஸ் ஏலியானஸ் அவரது ஆன் தி நேச்சர் ஆஃப் அனிமல்ஸ் என்ற படைப்பில் இந்தக் கதை மீண்டும் கூறப்பட்டது.[5]

குறிப்புகள்[தொகு]

  1. Ashliman, D.L. "Androcles and the Lion and other folktales of Aarne-Thompson-Uther type 156". Pitt.edu.
  2. Aulus Gellius, Noctes Atticae, Book V. xiv
  3. Based on the dates of Apion's tenure in Rome, see Hazel, John (2002). Who's who in the Roman World. Psychology Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415291620. https://books.google.com/books?id=bfkd6fy_zb8C&q=apion+settled+in+rome&pg=PA17. பார்த்த நாள்: 2009-04-10. 
  4. The Attic Nights of Aulus Gellius, p. 258
  5. Claudius Aelianus, Περὶ Ζῴων Ἰδιότητος, Book VII.xlviii
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்திரோகிலீசு&oldid=3882438" இலிருந்து மீள்விக்கப்பட்டது