ஜான் டி. பேட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ், 1890 க்கான பேட்டனின் ஓவியங்களில் ஒன்று

ஜான் டிக்சன் பேட்டன் (John Dickson Batten) (8 அக்டோபர் 1860 - 5 ஆகஸ்ட் 1932) எண்ணெய்சாயம், டெம்பரா ஓவியங்கள் மற்றும் சுதை ஓவியங்களை வரைந்த ஆங்கில ஓவியரும், புத்தக விளக்கப்படம் மற்றும் அச்சிடுபவரும் ஆவார். தென் மேற்கு இங்கிலாந்தின் டெவோனில் உள்ள பிளைமவுத்தில் பிறந்தார். இவர் டெம்பரா வகை ஓவியர்களின் சங்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார்.

தொழில்[தொகு]

அல்போன்ஸ் லெக்ரோஸின் கீழ் நுண்கலைப் பள்ளியில் ஒரு மாணவராக இருந்தார். சர் எட்வர்ட் பர்ன்-ஜோன்ஸ் உடன் கிரோஸ்வெனர் அருங்காட்சியகத்தில் 1887 வரை தனது ஓவியத்தை காட்சிப்படுத்தினார். இவர் புராண மற்றும் உருவக கருப்பொருள்களில் ஈடுபட்டார்.பேட்டனின் ஓவியங்களில் தி கார்டன் ஆஃப் அடோனிஸ்: அமோரெட்டா அண்ட் டைம், தி ஃபேமிலி, மதர் அண்ட் சைல்ட், ஸ்லீப்பிங் பியூட்டி: தி பிரின்சஸ் ஃபிங்க்ஸ் ஹெர் ஃபிங்கர், ஸ்னோ ஒயிட் அண்ட் த செவன் ட்வார்வ்ஸ், அட்லாண்டா அண்ட் மெலனியன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை

1890களில் பேட்டன் நாட்டுபுறவியலாளர்களின் சங்கத்தில் உறுப்பினராக இருந்த ஜோசப் ஜேக்கப்ஸ் (மேலும் அதன் இதழான போல்க்லோரின் ஆசிரியரும் கூட, 1890-93 ) என்பவரால் தொகுக்கப்பட்ட விசித்திரக் கதைகளின் தொகுப்பிற்கு ஓவியம் வரைந்தார். இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ், மேலும் 1890 முதல் 1895 வரையிலான செல்டிக் ஃபேரி டேல்ஸ் மற்றும் யூரோபாஸ் ஃபேரி புக் (1916) போன்றவை. (பிந்தையது ஐரோப்பிய நாட்டுப்புற மற்றும் விசித்திரக் கதைகளாகவும் வெளியிடப்பட்டது. ) [1] ஆயிரத்தொரு இரவுகள் மற்றும் டான்டேவின் இன்ஃபெர்னோ போன்றவற்றின் ஆங்கிலப் பதிப்புகளுக்கும் ஓவியம் வரைந்தார்.

பேட்டன் இரண்டு கவிதைப் புத்தகங்களையும், பறக்கும் விலங்குகள் பற்றியும், பறக்கும் மனிதன் பற்றியும் புத்தகத்தையும் எழுதினார். [2] [3]

ஜான் டி. பேட்டனால் ஓவியம் வரையப்பட்ட இந்தியன் ஃபேரி டேல்ஸ், ஜோசப் ஜேக்கப்ஸால் எழுதப்பட்டது.

1890-களின் இறுதியில் இவர் முட்டை டெம்பராவின் ஓவிய நுட்பத்திற்கு திரும்பினார். மேலும், ஆர்தர் காஸ்கின் போன்ற பர்மிங்காம் கலைஞர்களுடன் அதன் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த ஊடகத்தில் இவரது பண்டோரா என்ற ஓவியம் 1913 இல் அரச கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பின்னர் 1918 இல் ரீடிங் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. அது இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது. [4] பேட்டன் டெம்பரா வகை ஓவியங்களில் பணியாற்றும் ஓவியர்களின் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். 1922 இல் டெம்பெரா ஓவியத்தின் பயிற்சி பற்றிய கட்டுரையை வெளியிட்டார்.

பண்டோரா, 1913
ஜான் டி. பேட்டனால் ஓவியம் வரையப்பட்ட இந்தியன் ஃபேரி டேல்ஸ், ஜோசப் ஜேக்கப்ஸால் எழுதப்பட்டது.

புகைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "John D. Batten (1860–1932) British". SurLaLune Fairytales Illustration Gallery. SurLaLuneFairyTales.com. Archived from the original on 2 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 19 September 2012.
  2. Verses, Cambridge: Devana Press, 1893.
      Poems, London: Chiswick Press, 1916.
  3. Batten, J.D. (1928) An Approach to Winged Flight, Brighton (England): Dolphin Press.
  4. “Pandora by J.D. Batten”, Reading University

ஆதாரங்கள்[தொகு]

Alan Windsor. (1998) Handbook of Modern British Painting and Printmaking, 1900–1990. Ashgate Publishing, 2nd ed. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85928-427-2 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1859284278.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டி._பேட்டன்&oldid=3676207" இலிருந்து மீள்விக்கப்பட்டது