உள்ளடக்கத்துக்குச் செல்

அதேலா ராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதேலா ராசு (Adela Raz) ஆப்கானித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தற்போது அமெரிக்காவுக்கான ஆப்கானித்தான் தூதராக பணியாற்றுகிறார் .[1] 1986 ஆம் ஆன்டு அதேலா பிறந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானித்தானின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தை வகித்த முதல் பெண் அதேலா ஆவார். ஆப்கானித்தான் பெண்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அதிக கவனம் செலுத்தினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

அதேலாவின் தந்தை தலிபான்களால் கொல்லப்பட்டார், ஏனெனில் அவர் மிகவும் முற்போக்கானவர் என்று கருதப்பட்டார்.[2]

அதேலா சர்வதேச உறவுகள், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் பாசுடனில் உள்ள சிம்மன்சு பல்கலைக்கழகத்தில் பிஏ மற்றும் டப்டசு பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் இராசதந்திரத்தில் எம்.ஏ.[3] பட்டங்களைப் பெற்றார். எச்-1பி1 நுழைவு இசைவு பெற்ற முதல் ஆப்கானித்தான் பெண் இவரேயாகும்.[2]

தொழில்

[தொகு]

அதேலா ராசு ஆப்கானித்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிப் பணியில் பணியாற்றினார்.[3] 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இவர் அமெரிக்காவில் ஒரு சர்வதேச மேம்பாட்டு அமைப்பில் பணியாற்றினார்.[3] பாலின சமத்துவம், பெண்களின் கல்வி மற்றும் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞராக விளங்கினார்.[2] பெண்கள் நிலையான வளர்ச்சியை வளர்க்கவும் சமூகத்தில் பங்கேற்கவும் அதேலா பணியாற்றியுள்ளார்.[2]

2013 ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் அமீத் கர்சாயின் அலுவலகத்தில் துணைப் பேச்சாளராகவும் தகவல் தொடர்பு இயக்குநராகவும் அதேலா நியமிக்கப்பட்டார். இந்த பதவிகளை வகித்த ஆப்கானித்தானின் முதல் பெண்.[3][4][5] என்ற சிறப்புக்கு அதேலா உரியவரானார். 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தலைமைப் பணியாளராகவும் 2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் தன்னுடைய 30 வயதில் பொருளாதார ஒத்துழைப்புக்கான துணை வெளியுறவு அமைச்சராகவும் அதேலா நியமிக்கப்பட்டார்.[3][6][7] குடியரசுத் தலைவர் நிர்வாக அலுவலகத்தின் அறிக்கையின்படி வெளியுறவு அமைச்சகம் மற்றும் சனாதிபதி கானியின் ஆணையின் அடிப்படையில் அதேலா ராசு இப்பதவியில் நியமிக்கப்பட்டார். ஆப்கானித்தான் அமைச்சகங்கள், பாராளுமன்றம் மற்றும் சிவில் சமூகம் உட்பட - ஆப்கானித்தான் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆப்கானித்தான் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அங்கீகரிப்பதாகவும் இந்நிகழ்வு அமைந்தது

2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இவர் வாசிங்டன் டிசியைப் பார்வையிடச் சென்ற ஆப்கானியப் பெண்களின் குழுவில் ஒருவராக இருந்தார். அங்கு இவர் ஆப்கானித்தான் அரசியல் வாழ்க்கையில் அதிகமான பெண்களின் தேவை மற்றும் உலகின் மற்றவர்கள் அவர்களைப் பங்குதாரர்களாகக் கருத வேண்டியதன் அவசியம் பற்றி பேசினார். ஆப்கானியப் பெண்கள் வெறும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உதவி பெறுநர்கள் மட்டுமல்ல என்றும் இவர் பேசினார் [8]

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியன்று குடியரசுத்தலைவர் அசுரப் கானி, ஐக்கிய நாடுகள் சபைக்கான ஆப்கானித்தானின் நிரந்தரப் பிரதிநிதியாக அதேலா ராசை நியமித்தார். தூதராக இருந்த மகமூத் சைகலுக்குப் பதிலாக அதேலா இப்பதவியைப் பெற்றார். இந்த பதவியை வகிக்கும் முதல் ஆப்கானியப் பெண் என்ற சிறப்பும் அதேலாவுக்குக் கிடைத்தது.[9][10][11][12] மார்ச் 2019 ஆம் ஆண்டு அதேலா பாலசுதீனிய மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான ஐ.நா குழுவின் துணைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Afghan Embassy DC. "New Ambassador". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
  2. 2.0 2.1 2.2 2.3 Elam-Thomas, Harriet Lee; Robison, Jim (2017). Diversifying Diplomacy: My Journey from Roxbury to Dakar. University of Nebraska Press. pp. 172–177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781612349503.Elam-Thomas, Harriet Lee; Robison, Jim (2017). Diversifying Diplomacy: My Journey from Roxbury to Dakar. University of Nebraska Press. pp. 172–177. ISBN 9781612349503.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Biography of Mrs. H.E. Adela RazDeputy Foreign Minister for Economic Cooperation". Ministry of Foreign Affairs, Islamic Republic of Afghanistan. Archived from the original on 2020-09-30. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11."Biography of Mrs. H.E. Adela RazDeputy Foreign Minister for Economic Cooperation" பரணிடப்பட்டது 2020-09-30 at the வந்தவழி இயந்திரம். Ministry of Foreign Affairs, Islamic Republic of Afghanistan.
  4. Harwooni, Mirwais; Shalizi, Hamid (25 June 2013). "Afghan Taliban attack in Kabul throws peace talks into further doubt". Reuters. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  5. Graham-Harrison, Emma (18 February 2014). "Hamid Karzai orders changes to draft law amid fears for Afghan women". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  6. "Adela Raz appointed deputy foreign minister for economic affairs". Khaama Press. 19 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  7. Mashal, Mujib (9 January 2018). "Cutting Into Afghan Patronage: A Struggle to Make Government Younger". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  8. Mizener, Sara (8 March 2018). "Adela Raz and The New Generation of Afghan Women Leaders Delegation". The Initiative to Educate Afghan Women. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  9. Khan Saif, Shadi (31 December 2018). "Afghanistan appoints first female permanent UN envoy". Anadolu Agency. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.Khan Saif, Shadi (31 December 2018). "Afghanistan appoints first female permanent UN envoy". Anadolu Agency. Retrieved 1 January 2019.
  10. "Adela Raz new Afghan ambassador to UN". Pajhwok Afghan News. 31 December 2018. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  11. Ashrafi, Nabila (1 January 2019). "Govt Appoints New Representative To UN". TOLO News. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  12. "Adela Raz becomes Afghanistan's first female envoy to UN". The Frontier Post. 31 December 2018. Archived from the original on 30 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  13. Farooq, Umar (29 March 2019). "UN picks Afghan envoy as VP of Palestinian committee". Anadolu Agency. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதேலா_ராசு&oldid=3857634" இலிருந்து மீள்விக்கப்பட்டது