உள்ளடக்கத்துக்குச் செல்

அதனா ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதனா ஒப்பந்தம்
கையெழுத்திட்டது20 அக்டோபர் 1998
இடம்அதனா, துருக்கி
மூலமுதலான
கையெழுத்திட்டோர்
சித்கி உகுர் ஜியால்
அத்னான் பத்ர் ஹசன்
தரப்புகள் சிரியா
 துருக்கி

அதனா ஒப்பந்தம்(The Adana Agreement) (pronounced [aˈda.na];துருக்கியம்: Adana Mutabakatı;அரபு மொழி: اتفاقية أضنة‎) was an agreement made between துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கிடையில் 1998 ஆம் ஆண்டில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியை சிரியாவிலிருந்து வெளியேற்றுவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் ஆகும். [1]

பின்னணி

[தொகு]

சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே ஒரு கடினமான உறவு நிலவி வந்தது. வரலாற்று காலத்திலிருந்து சிரிய கத்தே மாகாணம், யூப்ரடீஸ் - டைகிரிஸ் நதி அமைப்பின் மிகைநீர்ப்போக்கு தொடர்பான சச்சரவுகள் ஆகியவை காரணமாக இந்த கடினமான உறவு நிலவி வந்தது எனலாம். ஆகவே இந்த நாடுகள் எதிரெதிர் அணிகளில் சார்ந்து நின்று பனிப்போர் சூழலைக் கொண்டிருந்தன. துருக்கி வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புடனும், சிரியா சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமாகவும் இருப்பதாக வெளிக்காட்டிக் கொண்டன.[2][3]

1980கள் மற்றும் 1990களில், சிரியா - துருக்கி தொடர்புகள் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியின் நிறுவன முகாம்களையும், அதன் தலைவர் அப்துல்லா ஓசுலானையும் தனது பிராந்தியப் பகுதிகளுக்குள் அனுமதித்ததன் விளைவாக மிகவும் நெருக்கடிக்கு ஆளாயின எனலாம். குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி ஒரு சுயேச்சதிகாரம் கொண்ட, துருக்கியின் ஆட்சிப்பகுதிக்குள் உள்ள பரப்புகளையும் உள்ளடக்கிய குர்திசுத்தானை குர்திஷ் - துருக்கிய சச்சரவிற்குப் பிந்தைய துருக்கிய அரசாங்கத்திற்கெதிராக உருவாக்க விரும்பியது.[2]

துருக்கிய ஆட்சியாளர்கள் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியை ஒரு தீவிரவாத அமைப்பாக வகைப்படுத்தியதோடு, அந்த அமைப்பை ஒழித்துக்கட்ட பிரச்சாரம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தது. சிரியா மேற்படி அமைப்பினரை வெளியேற்ற வேண்டும் என்றும் ஓசுலானை துருக்கிய அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் சிரியாவிற்குள் உள்நுழைவு படையெடுப்பை மேற்கொள்வோம் என்றும் மிரட்டினர்.[4][5][2] அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இதே நேரத்தில் துருக்கிக்கு ஆதரவாக சிரியாவிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தது. [6]

சிரியா தொடக்கத்தில் துருக்கிய கோரிக்கைகளைப் புறக்கணித்தது. ஆனால், குறிப்பிடத்தக்க சமரச முயற்சிகளுக்குப் பின்னர் பகுதியளவிற்கு, அதாவது குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியின் இருப்பு குறித்து துருக்கிய வேண்டுகோள்களில் பகுதியளவிற்கு உடன்பட ஒத்துக்கொண்டது. ஒப்பந்தத்தின் போக்கில், சிரிய அரசு ஓசுலானை துருக்கிய அதிகாரிகள் வசம் ஒப்படைக்காமல் தமது நாட்டிலிருந்து வெளியேறச் செய்தது. [5] ஓசுலான், மாஸ்கோ செல்லும் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.[6][7]

ஓசுலானின் புறப்பாட்டிற்குப் பிறகு, சிரியா தனது பிராந்திய எல்லைக்குள்ளிருந்து இன்னும் வெளியேறாமல் இருந்த அந்த அமைப்பினரை சுட்டுததள்ளினர். [4]

ஒப்பந்தம்

[தொகு]

அதனா ஒப்பந்தமான துருக்கி மற்றும் சிரியா இடையே 20 அக்டோபர் 1998 அன்று துருக்கிய நகரமான அதனாவில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது:[4][8]

துருக்கியின் "பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும்" என்று கருதப்படும் எந்தவொரு செயலையும் சிரியா அனுமதிக்காது. அவ்வாறான செயல்பாட்டில் ஈடுபடும் குழுவிற்கு எந்தவொரு நிதி அல்லது பொருள் ஆதரவையும் அதன் பிரதேசத்தின் வழியாக வழங்க இது அனுமதிக்காது. சிரியா குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியின் புதிய முகாம்களை நிறுவவோ, அதன் எல்லைகளுக்குள் வணிக நடவடிக்கைகளில் பங்கேற்கவோ அனுமதிக்காது.சிரியா குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியை ஒரு 'பயங்கரவாத அமைப்பு' என்று அங்கீகரித்து அதன் அனைத்து நடவடிக்கைகளையும், அதனுடன் தொடர்புடைய எந்தவொரு குழுக்களின் நடவடிக்கைகளையும் சிரிய மண்ணில் தடை செய்யும். குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை சிரியா வழியாக மூன்றாம் நாடுகளுக்கு செல்ல சிரியா அனுமதிக்காது.அப்துல்லா ஓசுலானை மீண்டும் தனது எல்லைகளுக்குள் நுழைய சிரியா அனுமதிக்காது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற சிரியா தவறிவிட்டால், சிரியா-துருக்கி எல்லை வழியாக சிரியாவிற்கு 5 கி.மீ தொலைவில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சிக்குத் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் நபர்களை துரத்த துருக்கிக்கு உரிமை உண்டு.

இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய நோக்கமானது சிரிய - துருக்கிய இரு தரப்பு உறவுகளை மீட்டமைப்பதாகும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Why is the 1998 Adana pact between Turkey and Syria back in the news?, SINEM CENGIZ, January 25, 2019, arabnews.com.
  2. 2.0 2.1 2.2 "Syria and Turkey: The PKK Dimension". www.washingtoninstitute.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.
  3. Şafak, Yeni. "1980s CIA reports: Syria backing PKK". Yeni Şafak (in துருக்கிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.
  4. 4.0 4.1 4.2 "From Rep. of Turkey Ministry of Foreign Affairs". Republic of Turkey Ministry of Foreign Affairs. பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.
  5. 5.0 5.1 "Profile: Abdullah Ocalan". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.
  6. 6.0 6.1 Weiner, Tim (1999-02-20). "U.S. Helped Turkey Find and Capture Kurd Rebel" (in en-US). The New York Times. https://www.nytimes.com/1999/02/20/world/us-helped-turkey-find-and-capture-kurd-rebel.html. 
  7. staff, By; agencies (1999-02-16). "Ocalan: a profile" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/1999/feb/16/kurds6. 
  8. "Analysis: What does the Adana deal mean for Turkey and Syria?". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதனா_ஒப்பந்தம்&oldid=3065278" இலிருந்து மீள்விக்கப்பட்டது