அணுக்கரு கடிகாரம்
அணுக்கரு கடிகாரம் (nuclear clock) என்பது அணுக்கருவிற்குள் நிகழும் நிலைமாற்றத்தினால் உண்டாகும் அதிர்வெண்ணை ஆதார அதிர்வெண்ணாகக் கொண்டு செயல்படும் ஒரு கருத்தியலான கடிகாரம் ஆகும். இது அணுக் கடிகாரத்தில் எவ்வாறு எதிர்மின்னிகள், அதன் சுற்று வட்டப்பாதையில் ஏற்படும் நிலைமாற்றத்தால் ஏற்படுத்தும் அதிர்வெண்ணைக் கொண்டு செயல்படுகிறதோ, அதே போல் அணுக்கருவில் ஏற்படும் மாற்றத்தால் செயல்படுகிறது. ஆனால் இவை தற்போதுள்ள அணுக் கடிகாரங்களை விட துல்லியமாகச் செயல்படக்கூடியவை.[1] இதன் உறுதியற்றத் தன்மை என்பது 10−19 என்ற அளவில் உள்ளது.[2]
தோரியம்-229எம்-ல் நடைபெறும் நிலைமாற்றம்
[தொகு]தோரியம்-229எம் என்பது தோரியம் அணுவின் அயனிகளில்ஒன்றாகும். இந்த அணுவின் கருவில் காம்மா கதிர் சிதைவால் ஏற்படும் நிலை மாற்றங்கள் ஆதார அதிர்வெண்ணாகக் கொண்டு அணுக்கரு கடிகாரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இது வெற்றிட புற ஊதா அலைகளின் அதிர் வெண்களை வெளிவிடுகிறது. இந்த அதிர்வெண்களை சீரொளித் தூண்டல் மூலம் உண்டாக்க இயலும்.
2016 ஆம் ஆண்டு முதன் முதலில் ஓரெடைத் தனிமப்பெயர்வு 6.3 க்கும் 18.3 இலத்திரன்வோல்ட்க்கும் இடையே இருப்பது கண்டறியப்பட்டது. [3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Physics: From the atomic to the nuclear clock". Ludwig-Maximilians-Universität München. 6 May 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
- ↑ G. A. Kazakov; A. N. Litvinov; V. I. Romanenko; L. P. Yatsenko; A. V. Romanenko; M. Schreitl; G. Winkler; T. Schumm (2 Oct 2012). "Performance of a 229 Thorium solid-state nuclear clock". New Journal of Physics 14 (8): 083019. doi:10.1088/1367-2630/14/8/083019.
- ↑ von der Wense, Lars; Seiferle, Benedict; Laatiaoui, Mustapha; Neumayr, Jürgen B.; Maier, Hans-Jörg; Wirth, Hans-Friedrich; Mokry, Christoph; Runke, Jörg et al. (5 May 2016). "Direct detection of the 229Th nuclear clock transition". Nature 533 (7601): 47–51. doi:10.1038/nature17669.
- ↑ Ludwig Maximilian University of Munich(2016-05-06). "Results on 229mThorium published in "Nature"". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2016-08-27 at the வந்தவழி இயந்திரம்