அட்ரியானா ஒகாம்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்ரியானா ஒகாம்போ யூரியா
Adriana Ocampo Uria
பிறப்புஅட்ரியானா கிறித்தியான் ஒகாம்போ
5 சனவரி 1955 (1955-01-05) (அகவை 68)
பாரன்கில்லா, கொலொம்பியா
துறைகோள் அறிவியல்
பணியிடங்கள்நாசா
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலஸ்
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், நோர்த்பிரிட்ச்
ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம்

அட்ரியானா ஒகாம்போ (Adriana Ocampo) ஒரு கோள் அறிவியல், மற்றும் நிலவியலாளரும் ஆவர். இவர் நாசா தலைமையக அறிவியல் திட்ட மேலாளர். இவர் தன் ஆய்வால் சிக்சுலூப் மொத்தல் குழிப்பள்ளத்தைக் கண்டுபிடித்தார். இவர் சிக்சுலூப் மொத்தல் இடத்துக்கு ஆறு தடவை ஆய்வுப்பயணமாகச் சென்றுள்ளார். ஒகாம்போவும் அவரது குழுவினரும்சாடுவில் உள்ள அவோரவுங்கா குழிப்பள்ளத் தொடரையும் 1996இல் கண்டுபிடித்தனர்.[1]

இளம்பருவமும் கல்வியும்[தொகு]

அட்ரியானா கிறித்தியன் ஒகாம்போ 1955 ஜனவரி 5இல் கொலம்பியாவில் உள்ள பாரன்குவிலாவில் பிறந்தார். இவரது முதல் பிறந்த நாளுக்கு முன்பே இவர் குடும்பம் அர்ஜெண்டீனாவின் புவெனோசு ஏரசுவுக்கு இடமாறியது. பிறகும் இவரது 15ஆம் அகவையில் அது கலிபோர்னியா, பசடேனாவுக்கு 1970இல் மீண்டும் மாறியுள்ளது.[2]

ஒகாம்போ புவியியலில் இளம் அறிவியல் பட்டத்தை இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1983 இல் பெற்றுள்ளார். இவர் மூதறிவியல் பட்டத்தைக் கோள்சார் புவியியலில் நார்த்ரிட்ஜ் எனும் கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1997 இல் பெற்றார். இவர் முனைவர் பட்டத்தை நெதர்லாந்தில் உள்ள அம்சுடெர்டாம் நகர விரியே பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[3]

வாழ்க்கைப்பணி[தொகு]

ஒகாம்போ பள்ளி கல்வியின்போதே தாரைச் செலுத்த ஆய்வகத்தில் தன்னார்வக் கோளியலாளராகத் தன் பணியைத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போதும் கோடையிலும் அங்கு இவர் பணியாளராகவிருந்தார். இவர் அங்கு பல நாசா கோளியல் திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். வியாழ்ன் கோள்பயணம், புளூட்டோவுக்கான புது தொடுவான்கலப்பயணம், ஒசிரிசு-ரெக்சு சிறுகோள் பதக்கூறு எடுத்துவரும் திட்டம் போன்ற திட்டங்களும் இவற்றில் அடங்கும். இவ்ர் ஐரோப்பிய விண்வெளி முகமையின் வெள்ளி விரைவூர்தி திட்டம், யப்பானின் வன், விண்வெளித் தேட்ட முகமையின் அகாத்சுக் எனும் வெள்ளி காலநிலைக் கணிப்பு வட்டணைக்கலம் ஆகிய நாசா ஒருங்கிணைத்த பன்னாட்டு விண்வெளி ஆய்வுகளில் முதன்மையான அறிவியலாளராக பங்கேற்றுள்ளார்.

இவர் 2010-இல் “El Mundo de Copocuqu: La Reina Gravedad y El Rey Masa” எனும் கல்வியியல் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். (நாசா NP-2010-03-647-HQ).[4]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

ஒகாம்போ 1992 இல் அவ்வாண்டிற்கான அரிவியற்பெண்மணி விருதை இலாசு ஏஞ்சலீசில் மெக்சிகானா தேசிய மகளிர் ஆணையத்தின் இடமிருந்து பெற்றார். இவர் 1996 இல் பெண்களுக்கான அறிவுரை மன்றத்தின் விருதையும் பெற்றுள்ளார். மேலும் 1997 இல் அறிவியல் தொழில்நுட்ப விருதை சிகானோ கூட்டமைப்பில் இருந்து பெற்றுள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ரியானா_ஒகாம்போ&oldid=3581594" இருந்து மீள்விக்கப்பட்டது