ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம்

ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம் (University of Amsterdam) நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டமில் உள்ளது. இது பெரியதும் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பல்கலைக்கழகமும் ஆகும். நெதர்லாந்தில் நிறுவப்பட்ட மிகப் பழைய கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.[1] மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம், அறிவியல், சட்டம், மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளைக் கொண்டுள்ளது. டச்சு, ஆங்கில மொழிகளுக்கும் படிப்புகள் உண்டு. இது ஐரோப்பிய ஆய்வுப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது.
இந்த பல்கலைக்கழகம் ஆறு நோபல் பரிசு வெற்றியாளர்களையும், ஐந்து நெதர்லாந்து பிரதமர்களையும் உருவாக்கியுள்ளது.[2]
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Jacob Belzen (2010). Towards Cultural Psychology of Religion: Principles, Approaches, Applications. பக். 215. https://archive.org/details/towardsculturalp00belz.
- ↑ "Academic awards". University of Amsterdam இம் மூலத்தில் இருந்து 2011-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927084029/http://www.english.uva.nl/research/worldclassresearch.cfm/4911BF5C-A072-4176-961FA6F0B7442D64.
வெளி இணைப்புகள்[தொகு]
- University of Amsterdam பரணிடப்பட்டது 2006-09-01 at the வந்தவழி இயந்திரம்