அடோல்ஃப் இயூஜின் பிக்
Appearance
அடோல்ஃப் பிக் Adolf Fick | |
---|---|
அடோல்ஃப் பிக் (1829–1901) | |
பிறப்பு | 3 செப்டம்பர் 1829 காசெல், செருமனி |
இறப்பு | 21 ஆகத்து 1901 பிளாக்கென்பெர்க், பெல்ஜியம் | (அகவை 71)
தேசியம் | செருமனியர் |
துறை | உடலியங்கியல் உயிரி இயற்பியல் |
பணியிடங்கள் | சூரிக் பல்கலைக்கழகம் வூர்சுபுர் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மார்பூர்க் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | கண் பார்வையின் சமச்சீரற்ற தன்மையால் ஏற்படும் ஒளியியல் பிறழ்வு (1851) |
ஆய்வு நெறியாளர் | பிரான்சு லூட்விக் பிக்[1] |
அறியப்படுவது | பரவலுக்கான பிக்சு விதிகள் பிக் கோட்பாடு இம்பேர்ட்-பிக் விதி]] |
அடோல்ஃப் இயூஜின் பிக் (Adolf Eugen Fick, 3 செப்டம்பர் 1829 - 21 ஆகத்து 1901) செருமனியில் பிறந்த மருத்துவரும், உடலியங்கியலாளரும் ஆவார்.
1855 இல், இவர் பிக்கின் பரவல் விதிகளை அறிமுகப்படுத்தினார், இது ஒரு திரவ சவ்வு முழுவதும் வாயுப் பரவலைக் கட்டுப்படுத்துகிறது. 1870 ஆம் ஆண்டில், இப்போது பிக் கோட்பாடு என்று அழைக்கப்படுவதைப் பயன்படுத்தி, இதய வெளிப்பாட்டை முதலில் அளந்தார்.
பிக் தனது பரவல் விதியை இருமுறை வெளியிட முடிந்தது, ஏனெனில் இது உடலியங்கியலுக்கும், இயற்பியலுக்கும் சமமாகப் பொருந்தும். இவரது பணி இதய வெளிப்பாட்டை அளவிடுவதற்கான நேரடி பிக் முறையை உருவாக்க வழிவகுத்தது.
பிக்கின் மருமகன், அடோல்ஃப் காசுட்டன் இயூஜென் பிக் தொடு வில்லையைக் கண்டுபிடித்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கணித மரபியல் திட்டத்தில் அடோல்ஃப் இயூஜின் பிக்
- ↑ The "Kontaktbrille" of Adolf Eugen Fick (1887) பரணிடப்பட்டது 2012-03-05 at the வந்தவழி இயந்திரம், accessed 20 April 2010
வெளி இணைப்புகள்
[தொகு]- Short biography and bibliography in the Virtual Laboratory of the Max Planck Institute for the History of Science
- Science Quotes by Adolf Eugen Fick (todayinsci.com)