உள்ளடக்கத்துக்குச் செல்

அடுனிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலி அஹமது செயித் (ஆங்கிலம்:Ali Ahmed Said, பிறப்பு:1930) அல்லது பிரபலமாக புனைப் பெயரான அடோனிஸ் அல்லது அடுனிஸ் கொண்டவர் ஒரு சிரிய கவிஞர் ஆவார்.[1][2][3]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

1950 இல் டமஸ்க்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1956 இல் லெபனானுக்கு நாடுகடத்தப்பட்டார். 1957 இல் லெபனியக் கவிஞர் யூஸுஃவ் அல்-க்ஹால் (Yusuf al-Khal) என்பவருடன் இணைந்து ஒரு பதிப்பகத்தை நிறுவினார். 1968 இல் மௌஃவிகிஃவ் (Mawfiqif) என்னும் அரபுக் கவிதைச் சஞ்சிகையத் தொடங்கினார்.[சான்று தேவை]

படைப்புகள்

[தொகு]

மஹ்மூட் தர்வீஷ், அடோனிஸ், சமிஹ் அல் காசிம் (Samih al Qusim) ஆகிய மூவரது கவிதைகளையுங் கொண்ட தொகுதியின்று 'ஒரு தேசப்படத்திற்குப் பலியானோர்' (Victims of a Map) என்ற தலைப்பில் 1984 இல் வெளியானது. அடோனிஸின் கவிதைகளிற் சில சி. சிவசேகரத்தால் மொழிபெயர்க்கப்பட்டு பாலை என்ற தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக 1999 இல் வெளிவந்தது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Adonis". Lexicorient. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 5 November 2015.
  2. "BA in philosophy, Damascus University, 1954". Archived from the original on 2015-05-28. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  3. "The "Other" Middle East; An Anthology of Levantine Literature, in Search of Identity p. 26" (PDF). Archived from the original (PDF) on 2020-10-25. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுனிஸ்&oldid=3729859" இலிருந்து மீள்விக்கப்பட்டது