மஹ்மூட் தர்வீஷ்
மஹ்மூட் தர்வீஷ் Mahmoud Darwish | |
---|---|
பிறப்பு | மார்ச் 13, 1941 அல்-பிர்வா |
இறப்பு | ஆகத்து 9, 2008 ஹூஸ்டன், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 67)
பணி | கவிஞர், எழுத்தாளர் |
மஹ்மூட் தர்வீஷ் (Mahmoud Darwish) (மார்ச் 13, 1941 - ஆகஸ்ட் 9, 2008) ஒரு பாலஸ்தீன படைப்பிலக்கிய கர்த்தாவாவார்.
இவர் பலஸ்தீனத்தில் அக்றே என்ற நகருக்கு கிழக்கேயுள்ள பிந்வா என்ற கிராமத்தில் 1941 இல் பிறந்தார். அக்கிராமம் 1948 இஸ்ரேலியரால் அழிக்கப்பட பெற்றோருடன் லெபனானுக்குக் குடிபெயர்ந்தார். 1971 இல் இஸ்ரேலை விட்டு வெளியேறி கெய்ரோவில் வாழ்ந்தார். 1972 முதல் அவர் பெய்ரூத்தில் வாழ்ந்துவந்தார்.
பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆராய்ச்சி நிலைய இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஜனரஞ்சக இசைக்கலைஞர்களுக்கு நிகரான பிரபலம் இவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
1969 இல் ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் அமைப்பு இவருக்கு தாமரை விருது வழங்கி கௌரவித்தது.
இவரது முதல் கவிதைத்தொகுதியான சிறகிழந்த பறவைகள் 1960 இல் வெளிவந்தது.
வெளியிட்டுள்ள நூற்கள்
[தொகு]- ஒலிவம் இலைகள் (1964)
- பலஸ்தீனத்திலிருந்து ஒரு காதலன் (1966)
- இரவின் முடிவு (1967)
- கலிலீயில் பறவைகள் இறக்கின்றன (1970)
- நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கவில்லை (1972)
- ஏழாவது தாக்குதல் (1975)
- திருமணங்கள் (1977)
தமிழில் இவருடைய படைப்புகள்
[தொகு]இவருடைய பல கவிதைகள் தமிழில் பலரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பாலஸ்தீனக் கவிதைகள் என்ற தொகுப்பு நூலில் இவருடைய கவிதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நூலில் தர்வீஷின் கவிதைகளோடு சேர்த்து பல பாலஸ்தீனக் கவிஞர்களுடைய கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.
எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா மொழிபெயர்த்து தொகுத்த "மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள்" என்னும் நூலிலும் இவருடைய கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
உயிர்மை பதிப்பகத்தினுடைய "நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்" என்ற நூலில் தர்வீஷினுடைய கவிதைகள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2006-06-28 at the வந்தவழி இயந்திரம்
- Darwish biography பரணிடப்பட்டது 2006-05-29 at the வந்தவழி இயந்திரம்
- 2000 article on Darwish from the Ramallah Journal
- 2002 Article on Darwish from The Progressive பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
- Short biography, two poems and one exerpt at Fence பரணிடப்பட்டது 2002-10-01 at the Library of Congress Web Archives
- Five Darwish poems at Poemhunter.com
- Seven Darwish poems at a Geocities fansite