உள்ளடக்கத்துக்குச் செல்

அடிப்படைச் சான்றுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல்நிலை தகவல் வளம் அல்லது அடிப்படைச் சான்றுகள் (primary sources) முதன்மைச் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன. இதனை சமகாலச் சான்று எனலாம்.[1][2][3]

வரலாறு எழுதுவோர் முதன்மையான சான்றுகளின் அடிப்படையிலேயே எழுதுகின்றனர். முதன்மையான சான்று என்பது வரலாறு எழுதப்படும் காலத்திய சான்று. தொல்பொருள், கல்வெட்டு, நாணயம், இலக்கியம், சமகாலத்தவர் குறிப்பு போன்றவை இந்த முதன்மையான சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன. எழுதப்படும் செய்தி பற்றி முன்பே ஆய்வாளர்கள் தந்துள்ள சான்றுகள் சார்புச் சான்றுகள் (secondary sources) எனக் கொள்ளப்படுகின்றன. இவை பிற்காலச் சான்றுகள்.

சங்ககால வரலாறு எழுதுவோர் சங்கப் பாடல்களிலிருந்தும் அக்காலக் கல்வெட்டு போன்றவற்றிலிருந்தும் சான்று தந்தால் அது அடிப்படைச் சான்று. தொடர்புள்ள செய்திகளை ஆய்வாளர்களின் நூல்களிலிருந்து சான்று தந்தால் அது சார்புச்சான்று. முதல்நிலைச் சான்று, பின்னிலைச் சான்று என்பன இவற்றின் விளக்கங்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Peace, Kristin. "Journalism: Primary Sources". Pepperdine University. Archived from the original on Jan 18, 2018. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  2. "Primary, secondary and tertiary sources". University Libraries, University of Maryland.
  3. "Primary and secondary sources பரணிடப்பட்டது 1 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்". Ithaca College Library.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்படைச்_சான்றுகள்&oldid=3900245" இலிருந்து மீள்விக்கப்பட்டது