அடிநிலை உடல் வெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
படம். 1 உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றமானது, ஒரு நாளில், காலை 10 மணிக்கு 37.5° C. இலிருந்து மாலை 6 மணிக்கு 36.3° C யாக குறைவதைக் காட்டும் விளக்க அட்டவணை
படம். 2 Example of a basal body temperature chart. Menstruation begins on day 1. The rise in temperature between days 14 and 18 are the indication of ovulation. Temperature was taken orally with a regular fever thermometer. Temperature reading is very sensitive to breaks in the regular sleep-rhythm (e.g. "sleeping in" on day 25 )

அடிநிலை உடல் வெப்பநிலை (Basal body temperature) என்பது ஓய்வுநிலையில் (பொதுவாக தூக்கத்தில் இருக்கும்போது) உடலில் இருக்கக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலையாகும். இது பொதுவாக தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன், வேறு உடல் இயக்கங்கள் ஆரம்பிக்க முன்னர் அளவிடப்படும். இருப்பினும் அந்த அளவீட்டை மிகச் சரியானதாகக் கொள்ள முடியாது. காரணம் அந்த அளவீடு, உண்மையான அடிநிலை உடல் வெப்பநிலையை விட சிறியளவில் அதிகமாக இருக்கும்.

பெண் களில் மாதவிடாய் சுழற்சியின்போது, சூல் முட்டையானது சூலகத்தில் இருந்து வெளியேறும் நாளில், இந்த அடிநிலை உடல் வெப்பநிலையானது, கால் - அரை பாகை செல்சியசு (அரை - ஒரு பாகை பாரன்ஃகைட்) இனால் உயர்ந்திருக்கும். இந்த உயர்வைக்கொண்டும் முட்டை வெளிவரும் நாளைக் கணிப்பார்கள்.

படம். 3 மாதவிடாய் சுழற்சி