அசாசின்சு கிறீடு (ஒளிக்காட்சி விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாசின்சு கிறீடு
Assassin's Creed
ஆக்குனர் யுபிசொப்ற்று மொன்றியல்
வெளியீட்டாளர் யுபிசொப்ற்று
இயக்குனர் பற்றிசு இடெசலேற்சு
தயாரிப்பாளர் சேடு இறேமண்டு
வடிவமைப்பாளர் மேக்சிம் பெலண்டு
நிரலாளர் மத்யூ மசரோல்
ஓவியர் இறபாயல் இலகோசுரே
எழுத்தாளர் கோரி மே
இசையமைப்பாளர் செசுபர் கிடு
தொடர் அசாசின்சு கிறீடு
ஆட்டப் பொறி சிமிற்றர் மற்றும் காவொக்கு
கணிமை தளங்கள் பிளேசுரேசன் 3
எக்சுபாக்சு 360
மைக்றோசொப்ற்று விண்டோசு
வெளியான தேதி பிளேசுரேசன் 3, எக்சுபாக்சு 360
நவம்பர் 13, 2007 (ஐக்கிய அமெரிக்கா)
நவம்பர் 16, 2007 (ஐரோப்பா)
நவம்பர் 21, 2007 (ஒசுதிரேலியா)
மைக்றோசொப்ற்று விண்டோசு
ஏப்பிரல் 8, 2008 (ஐக்கிய அமெரிக்கா)
ஏப்பிரல் 10, 2008 (ஐரோப்பா)
ஏப்பிரல் 11, 2008 (ஒசுதிரேலியா)


அசாசின்சு கிறீடு (Assassin's Creed) 2007இல் வெளிவந்த வரலாற்றுப் புனைகதை, அதிரடி-சாகச, உலாவித்திரியும் மற்றும் மறைந்து தாக்கும் வகையைச் சேர்ந்த ஒளிக்காட்சி விளையாட்டு ஆகும். இது யுபிசொப்ற்று மொன்றியலால் உருவாக்கப்பட்டு யுபிசொப்ற்றால் வெளியிடப்பட்டது. அசாசின்சு கிறீடு தொடரில் இது முதலாவது விளையாட்டு ஆகும். முதலில் எக்சுபாக்சு 360-இலும், பின்பு நவம்பர் 2007இல் பிளேசுரேசன் 3யிலும், ஏப்பிரல் 2008இல் மைக்ரோசொப்ற்று விண்டோசிலும் இது வெளியிடப்பட்டது. 1191இல் புனித பூமியில் நடைபெற்ற மூன்றாம் சிலுவைப் போர்க் காலப்பகுதியில் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதுடன், கசாசினைத் தளமாகக் கொண்டு இயங்கும் இரகசியக் கொலையாளிகளைப் பற்றியதாக இதன் கதை அமைந்துள்ளது. இவர்கள் சீற்றே எனும் அமைப்பின் உப பகுதியினராவர். "அனிமஸ்" எனும் பெயருடைய ஒரு இயந்திரத்தின் உதவியுடன், நவீன யுகத்தில் வாழும் இடெசுமண்டு மைல்சுவின் மரபியல் நினைவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக, அவருடைய மூதாதையரான அல்தயீர் இபின்-லா'காது எனும் கொலையாளியாக விளையாடமுடிகிறது.

மனித மூளையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்த "ஈடன் துண்டு" எனப்படும் ஒரு தொல்பொருளைக் கைக்கொள்வதற்காக அசாசின்கள் மற்றும் "நைற்சு ரெம்ப்ளார்' அமைப்பினருக்கிடையே ஏற்படும் மோதல்கள் பற்றியதான கதையமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விளையாட்டானது சாதகமான வரவேற்புகளைப் பெற்றுக்கொண்டதுடன் 2016இன் ஈ3 நிகழ்வுகளில் பல்வேறு விருதுகளைத் தனதாக்கிகொண்டது. 2009இல் இதன் தொடர்ச்சியான அசாசின்சு கிறீடு II வெளியிடப்பட்டது. அதனுடைய வெற்றியின் காரணமாக வருடந்தோறும் அசாசின்சு கிறீடு விளையாட்டுக்கள் வெளியிடப்படுவதுடன் வேறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டுள்ளன.

பிற ஊடகங்கள்[தொகு]

திரைப்படம்[தொகு]

அசாசின்சு கிறீடு (Assassin's Creed) 21, டிசம்பர் 2011 அன்று முழு நீளத் திரைப்படமாக வெளியிடப்பட்டது.