உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கோரின் வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கோரின் வீழ்ச்சி
நாள் 1431
இடம் அங்கோர், கெமர் பேரரசு
அயூத்தியாவின் வெற்றி
 • அயூத்தியா துருப்புக்கள் அங்கோரைக் கொள்ளையடித்தனர்
 • கெமர் பேரரசு சரிவைச் சந்தித்தது
 • கெமர் அரசன் இரண்டாம் போரோம் ரியக்கியா தெற்கு கம்போடியாவிற்கு தப்பி ஓடியது.
பிரிவினர்
அயூத்தியா இராச்சியம் கெமர் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
இரண்டாம் போரோம் ரியக்கியா

அங்கோர் வீழ்ச்சி (Fall of Angkor), அங்கோர் சாக் அல்லது அங்கோர் முற்றுகை என்றும் அழைக்கப்படுகிறது. இது அயூத்தியா இராச்சியத்தால் கெமர் தலைநகர் அங்கோர் மீது நடத்தப்பட்ட ஏழு மாத முற்றுகை ஆகும். அயூத்தியாவின் அதிகாரத்தின் சுபன்னாபும்-மோன் வம்சத்தை கெமர் அங்கீகரிக்க மறுத்த பிறகு, அயூத்தியாவின் சுபன்னாபும்-மோன் வம்சம் அங்கோர் நகரை முற்றுகையிட்டு தலைநகரைக் கைப்பற்றியது. கெமர் அரசர் பொன்கே யாட் நகரை விட்டு பாசனுக்கும் பின்னர் சக்டோமுக்கிற்கும் (இன்றைய புனோம் பென்) தப்பிச் சென்றார். கெமர் பேரரசு ஏற்கனவே வீழ்ச்சியில் இருந்தது. இதற்குப் பிறகு பேரரசு வீழ்ந்தது. அங்கோர் பின்னர் கைவிடப்பட்டது. அங்கோர் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசர் தலைநகரை முதலில் பாசானுக்கும் பின்னர் சக்டோமுக்கிற்கும் மாற்றினார். இது அங்கோர் காலத்துக்குப் பிந்தைய காலம் என அறியப்பட்டது.

வரலாறு[தொகு]

முதலாவது படையெடுப்பு அயூத்தியாவின் பௌத்த லாவோ-கெமர் வம்சத்திற்கும் அங்கோர் பிராமணக் கெமர்களுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாகும். இரண்டாவது மற்றும் இறுதிப் படையெடுப்புகளுக்கு அயூத்தியாவின் சுபன்னாபம்-மோன் வம்சத்தினர் தலைமை தாங்கினர்.

அயூத்தியாவின் மோன்-கெமர் வம்சங்களின் தலைமையின் கீழ் அங்கோர் படையெடுப்பில் தாய் மக்களும் இடம் பெற்றனர்.[1]

1353 இன் முதல் படையெடுப்பு[தொகு]

அயூத்தியாவின் இலவோ-கெமர் வம்சத்தின் படையெடுப்புகள் 1353 இல் தொடங்கியது. சில ஆதாரங்களின்படி, முதலாம் ராமதிபோடி அங்கோரைக் கைப்பற்றினார். 1358 இல் அங்கோரிய கெமர் இளவரசர் அங்கோர் நகரை மீண்டும் கைப்பற்றினார்.

1370 இல் இரண்டாவது படையெடுப்பு[தொகு]

1370 இல் அயூத்தியாவின் சுபன்னாபம்-மோன் வம்சத்தினர் அங்கோர்வாட்டை மீண்டும் ஒருமுறை முற்றுகையிட்டனர். அந்த நேரத்தில் கெமர் தலைநகரம் அசானுக்கு மாறியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அங்கோர் திரும்பியது என சில ஆதாரங்கள் கூறுகிறது.

1431 இல் அங்கோர் மீதான மூன்றாவது படையெடுப்பு மற்றும் வீழ்ச்சி[தொகு]

1431 ஆம் ஆண்டில், அயூத்தியாவின் சுபன்னபும்-மோன் வம்சம் மூன்றாவது படையெடுப்பிற்குப் பிறகு அங்கோர் தலைநகரைக் கைப்பற்றியது. அயூத்தியா ஒரு குறுகிய காலத்திற்கு தலைநகராக இருந்தது. பின்னர் கைவிடப்பட்டது. [2]

காரணிகள்[தொகு]

அங்கோர் வீழ்ச்சி குறித்து சில விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. [3] அங்கோர் வீழ்ச்சிக்கு மனித மற்றும் இயற்கை தோற்றம் கொண்ட பல்வேறு காரணிகள் காரணமாக கூறப்படுகிறது.

மனிதக் காரணிகள்[தொகு]

இராணுவத் தோல்வி[தொகு]

அங்கோர் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், குறிப்பாக தாய்லாந்து வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, 1431 ஆம் ஆண்டில் அயூத்தியாவின் சுபன்னாபம்-மோன் வம்சத்தின் தாக்குதலால் கெமர் அங்கூரைக் கைவிட்டு தென்கிழக்கு நோக்கி பின்வாங்கினார்.

தென்கிழக்காசியாவைச் சேர்ந்த சம்பா வீரர்கள் அதன் செல்வத்திற்காக நகரத்தை சூறையாடியிருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.

நீரினால் ஏற்பட்ட நகரத்தின் சரிவு[தொகு]

அங்கோர் எழுச்சி மற்றும் வீழ்ச்சியில் நீர் ஒரு முக்கிய பங்கு வகித்தது. மேலும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அறிஞர்கள் இப்போதுதான் இடைக்கால கெமர் சமுதாயத்தின் உண்மையான அளவு மற்றும் சாதனைகளை அறியத் தொடங்கியுள்ளனர். இரண்டாம் சூர்யவர்மனின் ஆட்சிக்குப் பிறகு இப்பகுதி கைவிடப்பட்டது. கொசுக்களை ஈர்க்கும் தேங்கி நிற்கும் நீர்த்தேக்கங்கள் மலேரியா பரவுவதற்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில் இது தென்கிழக்கு ஆசியாவில் இந்த நோய் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டமாகும்.[4]

வரலாற்றாளர் குரேசிலர், அங்கோர் வீழ்ச்சியானது சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாக வாதிடுகிறார். இது நீர்ப்பாசனம் செய்யப்பட்ட நெல் வயல்களையும் , நகரங்களையும் கம்போடியாவில் முன்பு காடுகளாக விரிவுபடுத்தியதால் ஏற்பட்டது. எனவே இது மனிதகுலத்தால் தூண்டப்பட்ட சுற்றுச்சூழல் நெருக்கடியாக இருக்கலாம்.[5]

அதிக மக்கள்தொகை வளர்ச்சியுடன், அங்கோர் தனது சொந்த மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை. இது சமூக அமைதியின்மை மற்றும் இறுதியில் சமூக வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பது ஒரு மால்தூசியன் வாதமாகும்.

மத நெருக்கடி[தொகு]

ஏழாம் செயவர்மனின் ஆட்சியைத் தொடர்ந்து கெமர் பேரரசு தேரவாத பௌத்தமாக மாறியதுடன் அங்கோர் வீழ்ச்சியை தொடர்புபடுத்திய சில அறிஞர்கள், இந்த மத மாற்றம் அங்கோரிய நாகரிகத்தின் அடித்தளமாக இருந்த இந்துத்துவ அரசாட்சியை அழித்துவிட்டது என்று வாதிடுகின்றனர்.[6][7] பரந்து விரிந்து கிடக்கும் கோயில்களுக்கு, அவற்றைப் பராமரிக்க சமமான பெரிய பணியாளர்கள் தேவை. தா புரோம் வளாகத்தில், 12,640 பேர் அந்த ஒற்றை கோவில் வளாகத்திற்கு சேவை செய்ததாக ஒரு கல் செதுக்கப்பட்டுள்ளது. பௌத்தத்தின் பரவலானது இந்த தொழிலாளர் படையைக் குறைத்தது மட்டுமல்லாமல், அவர்கள் அனைவருக்கும் உணவளிக்கத் தேவையான 300,000 விவசாயத் தொழிலாளர்களையும் பாதித்திருக்கலாம்.[8]

இயற்கை காரணிகள்[தொகு]

1400களின் முற்பகுதியில் தென்கிழக்கு ஆசிய வறட்சி[தொகு]

தென்கிழக்கு ஆசியா 1400 களின் முற்பகுதியில் கடுமையான வறட்சியை சந்தித்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் அங்கோர் வீழ்ச்சிக்கு முந்தைய தசாப்தங்களில் கிழக்கு ஆசிய கோடை பருவமழை மிகவும் நிலையற்றதாக மாறியது.[9] பிரண்டன் பக்லி இந்த வறட்சி அங்கோர் நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் வறண்டு போனதாகக் கூறுகிறார்.[10] இதையொட்டி, அதன் விரைவான சரிவு மற்றும் வெளிநாட்டு படையெடுப்பிற்கு வழிவகுத்தது.[4]

பருவநிலை மாற்றம்[தொகு]

காலநிலை மாற்றம் அங்கோர் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணியாக இருந்திருக்கலாம். இது இடைக்கால வெப்ப காலத்திலிருந்து சிறிய பனிக்கட்டிக் காலத்திற்கு மாறியது. அங்கோர் வீழ்ச்சியானது "நீரியல் உச்சநிலைகளுடன் வெற்றிகரமாக தொடர்பு கொள்ளத் தவறியதற்கான ஒரு ஈர்க்கக்கூடிய எடுத்துக்காட்டாகும்".[11]

பின்விளைவு[தொகு]

அங்கோர் வீழ்ச்சிக்குப் பிறகு பழங்காலக் கோயில் வளாகங்கள் கைவிடப்பட்டன என்ற பிரபலமான கருத்துக்கு மாறாக, பல முக்கியமான தளங்கள் பயன்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை இப்போது தேரவாத வழிபாட்டு முறைக்கு மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டன.[12] பதினைந்தாம் நூற்றாண்டில் அங்கோர் வீழ்ச்சியடைந்து, தெற்கே தலைநகரை நிரந்தரமாக அகற்றிய பிறகு, கெமர் அரச குடும்பம் மீண்டும் மீண்டும் அங்கோர் கோயில்களுக்குத் திரும்பி, கடவுள்கள் மற்றும் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்தி, பழைய சிலைகளை மீட்டெடுத்து, புதிய சிலைகளை நிறுவியதைக் காணலாம்.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. [CKS Public Presentation] A History of Cambodia: from Funan to Modern Times (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-10-20
 2. Miksic, John Norman; Yian, Goh Geok (2016-10-14). Ancient Southeast Asia (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 521. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-27904-4.
 3. Rappa, Antonio L. (2017-04-21). The King and the Making of Modern Thailand (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-315-41132-3.
 4. 4.0 4.1 DiBiasio, Jame (2013-07-15). "7. Hydraulic city". The Story of Angkor (in ஆங்கிலம்). Silkworm Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-63102-259-3.
 5. Dieu, Nguyen Thi; Nguyen, Thi Dieu (1999). The Mekong River and the Struggle for Indochina: Water, War, and Peace (in ஆங்கிலம்). Greenwood Publishing Group. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-96137-4.
 6. Chandler, A History of Cambodia, p. 78 ff.
 7. Coedès, Pour mieux comprendre Angkor, pp. 64–65.
 8. Richard Stone, Divining Angkor, National Geographic, July 2009.
 9. Trouet, Valerie (2020-04-21). Tree Story: The History of the World Written in Rings (in ஆங்கிலம்). JHU Press. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-3777-4.
 10. Buckley, Brendan; Fletcher, Roland; Wang, Shih-Yu; Zottoli, Brian; Pottier, Christophe (2014-07-01). "Monsoon extremes and society over the past millennium on mainland Southeast Asia". Quaternary Science Reviews 95: 1–19. doi:10.1016/j.quascirev.2014.04.022. https://www.researchgate.net/publication/262307421. 
 11. AghaKouchak, Amir; Easterling, David; Hsu, Kuolin; Schubert, Siegfried; Sorooshian, Soroosh (2012-10-24). Extremes in a Changing Climate: Detection, Analysis and Uncertainty (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 364. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-4478-3.
 12. Harris, Ian (2008-03-11). Cambodian Buddhism: History and Practice (in ஆங்கிலம்). University of Hawaii Press. p. 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-3298-8.
 13. Thompson, Ashley; Pitelka, Morgan (2007-12-03). "7. Angkor revisited". What's the Use of Art?: Asian Visual and Material Culture in Context (in ஆங்கிலம்). University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-3063-2.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கோரின்_வீழ்ச்சி&oldid=3817837" இலிருந்து மீள்விக்கப்பட்டது