உத்தோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் ராமதிபோடி
King of Ayutthaya
சுபன்புரி மாகாணத்தின் உ தோங் மாவட்டத்லுள்ள மன்னர் முதலாம் ராமதிபோடியின் சிலை, தாய்லாந்து
அயூத்தியாவின் மன்னன்
ஆட்சிக்காலம்4 மார்ச் 1351[1]–1369
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னையவர்ராமேசன்
பிறப்பு10 மார்ச் 1314
இறப்பு1369
குழந்தைகளின்
பெயர்கள்
ராமேசன்
பெயர்கள்
உதோங்
முதலாம் ராமதிபோடி
மரபுஉதோங் வம்சம்_

உ-தோங் (Uthong0 [2] ( Uthong ) அல்லது முதலாம் ராமதிபோடி ( Ramathibodi IAbout this soundpronunciation ; 1314–1369) அயூத்தியா இராச்சியத்தின் (தற்போது தாய்லாந்தின் ஒரு பகுதி) முதல் மன்னர் ஆவார்.[3]:222 இவர் 1351[4] முதல் 1369 வரை ஆட்சி செய்தார். 1350 இல் அரியணை ஏறுவதற்கு முன்பு இளவரசர் உதோங் ("தங்க தொட்டில்" என்று பொருள்) என்று அழைக்கப்பட்டார். உதோங்கின் பின்னணியைப் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. அதில் இவர் மாங்க்ராயின் வழித்தோன்றலாக இருக்கலாம் என்பதும் ஒன்றாகும்.[5]:27[6]

வரலாறு[தொகு]

நன்கு அறியப்பட்ட ஆதாரத்தின்படி, டச்சுக்காரரான ஜெரேமியாஸ் வான் இவ்லியட்டின் பதினேழாம் நூற்றாண்டுக் கணக்கு, ஒரு புராணக்கதை, ரமாதபோடி ஒரு சீன இனத்தவர் என்றும், சீனாவிலிருந்து கப்பலில் வந்தவர் என்று கூறுகிறது. வர்த்தகத்தில் வெற்றி பெற்ற பிறகு, அயூத்தியா வரை பயணம் செய்வதற்கு முன், தாய்லாந்து வளைகுடாவின் கடலோர நகரமான பெட்சபுரி நகரத்தை ஆட்சி செய்யும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார் என்றும் கூறுகிறது.

இவர், உள்துறை அமைச்சகம் ( வீங் ), கருவூல அமைச்சகம் ( கிளாங் ), மன்னரின் குடும்பத்திற்கான அமைச்சகம் ( வாங் ) மற்றும் விவசாய அமைச்சகம் ( நா ) என்ற நான்கு பெரிய அரச அதிகாரங்களை நிறுவினார். தாய்லாந்திற்க்கான சட்டங்களையும் உருவாக்கினார். இறுதியாக, மிங் வம்சத்துடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார்.[5]:28

புதிய நகரமான அயுதயாவில் தனது சொந்த தலைநகரை நிறுவினார். இவரது ஆட்சியில் கோரட், சந்தபுரி, தாவோய், தெனாசெரிம் மற்றும் மலாயாவின் பெரும் பகுதிகள் அடங்கியிருந்தன.[5]:28

போர்[தொகு]

1352 இல் யசோதரபுரத்தை முற்றுகையிட்டார். அடுத்த ஆண்டு அவர் வெற்றியடைந்து தனது மகன்களில் ஒருவரை அரியணையில் அமர்த்தினார். இருப்பினும், அவர்களால் 1357 வரை மட்டுமே அரியணையை வைத்திருக்க முடிந்தது. கெமர்கள் அதை மீண்டும் கைப்பற்றினர்.[7]:236

மன்னன் ராமாதிபோடியின் மரணம் வாரிசுரிமை குறித்த மோதலைத் தூண்டியது. ஆரம்பத்தில், இவரது மகன் மன்னர் ராமேசன் அயூத்தியாவின் ஆட்சியாளரானார். ஆனால் பின்னர் தனது மைத்துனரான முதலாம் பொரோமராச்சாவிற்கு ஆதரவாக பதவி விலகினார். அரியணைக்கான இந்த மாற்றம் அமைதியானதாவோ அல்லது போரின் மூலமாகவோ நடந்திருக்கலாம்.[5]:29

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Wyatt, David K., Thailand: A Short History, New Haven (Yale University), 2003. ISBN 0-300-08475-7
  • Srisak Vallipodom, Sheikh Ahmad Qomi and the History of Siam, Cultural Center of the Islamic City, Republic of Iran, Bangkok 1995, page 209
  • Plubplung Kongchana, The Persians in Ayutthaya, Institute of Asia Pacific Studies, Srinakharinwirot University.

இதனையும் பார்க்கவும்[தொகு]

முதலாம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தோங்&oldid=3700111" இருந்து மீள்விக்கப்பட்டது